மூலப்பதினெண் சித்தர்கள் வழங்கிய பூசா மொழி நூல்கள்
அருள்மிகு
பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களால், மூலப்பதினெண் சித்தர்கள்
மானுடர்களுக்கு வழங்கிய, அவர்களுக்கு பின் வாழ்ந்து சமாது ஏகிய பதினோரு பதினெண்
சித்தர் பீடாதிபதிகளும், சித்தர்களும், பதினெண் சித்தர்களும், காக்கையர்களும்,
காகபுசுண்டர்களும், மண்ணுலகத் தமிழர்களும், 43,73,112 (நாற்பத்து மூன்று இலட்சத்து
எழுபத்து மூவாயிரம் நூற்றி பன்னிரெண்டு) ஆண்டுகளாக மண்ணுலகில் பயன்படுத்தி வரும்
மந்தர, மந்திர, மந்திறங்கள் எண்ணில் அடங்காதவையாகும்.
அவற்றை பதினோராவது பதினெண்
சித்தர் பீடாதிபதி காலம் வரை பயன்படுத்தி வந்த தமிழர்கள், பிறாமணர்களின்
புதுமையான் கற்பனை வளம் மிக்க பயனற்ற, இறந்தே பிறந்த சமசுக்கிருதத்தை (தமிழுக்கு
சமமாக கிருதம் செய்யப்பட்டு, அதாவது, மாற்றி எழுதப்பட்டு, மேலும் பிற மொழிகளில்
இலக்கணங்களை கடன் வாங்கி, அதாவது வைக்கோல், கன்றுக்குட்டியை காட்டி பசுவின்
மடியில் பால் கறப்பது போல்) பயன்படுத்தும் வகையில் சதிவலையில் ஈடுபட்டார்கள். அந்த
வேளையில் பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளும், கருவூர்த்
தேவரும், திருமாளிகைத் தேவரும், அவர்களது சித்தரடியார் பெரும் கூட்டமும், தமிழர்களை
மாயவலையில் இருந்து காக்க ஆவண செய்தும் பயனற்றுப் போய் மூல தமிழ் மந்தர, மந்திர,
மந்திறங்கள் தமிழரிடம் இருந்து வழக்கொழியத் தொடங்கிய வேளையில்தான், பத்தாவது,
பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் நுட்பமான செயல்திட்டங்களால் காலம்
தோறும் தமிழை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை, மந்தர, மந்திர, மந்திறங்களை தமிழ்மொழி
வழி அருளுலக பூசை முறையில், தமிழர்களின் வாழ்வியல் சடங்குகளை, கோயில், ஆலயம்
மற்றும் 48 வகை வழிபடுநிலையங்களை பாதுகாக்கும் பெரும் முயற்சியில் இந்து
மறுமலர்ச்சி இயக்கம், கி.பி. 1772-ல் உருவாக்கப்பட்டு நாற்பத்து எட்டு அருளுலக,
பொருளுலக தமிழ், மொழி, இன, விடுதலைக்கான கட்டமைப்புகளை உருவாக்கி சென்றனர்.
அதன் பயனாக அருளுலக சட்டதிட்டங்கள்
படி பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி காலத்தில் மந்தர,
மந்திர, மந்திறங்கள் மீண்டும் தமிழின குருபீடத்தால், தமிழின குருபீடமான அரசயோகிக்
கருவூறாரால் அதிகாரப்பூர்வமாக அச்சில் ஏற்றி புத்தகங்களாக, செப்புப்பட்டயங்களாக,
ஓலைச்சுவடிகளாக வெளியிடப்பட்டது. இவையனைத்தும் அவரால் உருவாக்கப்பெற்ற
வழிபாட்டிடங்களிலும், அருட்கோட்ட, கருகுல, தருகுல, திருகுல, குருகுலத்திலும், மண்ணுலகமெங்கும்
விரவி உள்ள உல பன் மொழி அருளாளர்கள் இணைந்து உலக அருளாளர் பெருங்கூட்டத்தாரால் ஓதி
பயன்பாட்டிற்கு வர வெளியிடப்பட்டு தமிழர்கள் பயன்படுத்த ஆணையிடப்பட்டது.
இவையனைத்தும்
முறைப்படி மன்ணுலக பரப்பில் (அனைத்து) பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டு இனிமேல் எந்த
சதிகாரர்களும் தொடக்கூட முடியாதபடி தமிழர் பண்பாட்டையோ, கலை, இலக்கிய,
இலக்கணங்களையோ, மந்தர, மந்திர, மந்திறங்களையோ ஆகம விதிகளிலோ, தமிழர் வாழ்வியல்
சட்டதிட்டங்களையோ, குருபாரம்பரிய, அரசபாரம்பரிய, இலக்கிய பாரம்பரியத்தை தொடர்ந்து
பாதுகாத்து, நிகழ்த்திட வழிவகை செய்யப்பட்டு பெரும் அருட்கூட்டத்தை உருவாக்கி
செயல்பட ஆணையிடப்பட்டு இன்றும் நாம் செயல்படுத்தி வருகின்றோம்.
அதன்படி,
குருதேவரால் வெளியிடப்பட்ட மந்தர, மந்திர, மந்திறங்கள் மற்றும் ஐம்பேராயத்தாரால்
வெளியிட இருக்கும் மந்தர, மந்திர, மந்திறங்களின் தோத்தர, தோத்திர, தோத்திற
போற்றிகள், அகவல்கள், உரைகள், வாக்குகள், வாசகங்கள், உறுதிமொழிகள் (சத்திய வாக்கு)
என 68+ வகையிலான, பல இலட்சக்கணக்கான பக்கங்கள் அடங்கிய இந்துவேத, இந்துமத, சாத்தர,
சாத்திர, சாத்திற நூல்களும் (விரிவு நேரில்) விரைவில் வெளியிட ஆவண செய்யப்பட்டு
வருகின்றது.
(68 வகையிலான பூசை மொழி நூல்கள் எவை? என்பது பற்றிய விபரம்
அடுத்த பதிவில்…)
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஐயா வணக்கம்,
ReplyDeleteதாங்கள் மேலே குறிப்பிட்ட அனைத்து (81)புத்தகங்களும் கிடைக்குமா? அல்லது அதன் நகல் கிடைக்குமா? எனக்கு தெரியபடுத்தவும். எண்: 9884126333
வணக்கம் ஐயா மேலே குறிப்பிட்ட(81)தமிழ் கடவுள்கள் வகைபுத்தகங்கள் கிடைக்கவழிகாட்டி தமிழ்எழுத்துக்கள்படிக்க வாசிக்க நகல்கள் வழங்கிட உதவிடவேண்டுமாய் பணிவுடன்வேண்டுகிறேன்ஐயா அலைபேசிஎண்-9344887965
ReplyDelete