இந்துவேதத்தில் தை மாதத்தின் சிறப்புக்கள்!



 

02-10-1995 (பதினெண் சித்தர் பீடத்தின் 12வது பீடாதிபதி, ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் கையெழுத்துப் பிறதியில் இருந்து.)

பொதுவாக நாட்டு வழக்கில்; “தை பிறந்தால் வழி பிறக்கும்” - என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கியிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
உலகம் முழுவதும் சனவரி மாதத்தை ஆண்டின் ஆரம்ப மாதமாக, முதல் மாதமாகக் கருதுகின்ற மரபு தமிழர்களுடைய மரபுதான். தமிழர்கள்தான்; இந்த நான்காவது யுகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை மாதம் [சனவரி மாதம்] முதல்மாதமாக ஆண்டின் துவக்க மாதமாக இருந்ததை மாற்றினார்கள்; அல்லது மாற்றிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டார்கள். அதாவது இந்துவேதப்படி தை மாதம்தான் ஆண்டின் துவக்க மாதம்; ஆண்டின் முதல்மாதம்.
ஆனால், இப்பொழுது சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்க மாதமாக; முதல் மாதமாகக் கொண்டாடப் படுகின்றது. இதுபற்றி இக்கலியுகத்தில் 3001 முதல் 3250 முடிய செயல்பட்டிட்ட கரூரிலுள்ள பசுபதீசுவரர் ஆலயத்தை நிர்மாணித்த 10வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமது குருபாரம்பரிய நூலிலும், இலக்கிய பாரம்பரிய நூலிலும், அரச பாரம்பரிய நூலிலும் நேரடியாகத் தமிழரின் புத்தாண்டுத் துவக்கம் தை மாதமாகத்தான் இருந்தது என்பதையும்; காலப்போக்கில் சித்திரை மாதம் புத்தாண்டின் துவக்க மாதமாக, முதல் மாதமாக, ஆரம்ப மாதமாக மாற்றப் பட்டிட்டது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இவற்றின் சாரம்தான்; தை மாதத்தின் சிறப்புக்கள் என்ற கட்டுரையாக, சிறிய நூலாக வெளியிடப்படுகின்றது.

 (1) அண்டபேரண்டங்களிலிருந்து இந்த உலகம் வெறும் தண்ணீரால் ஆன உருண்டையாக இருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள்ளிலிருந்து கற்பாறைகள், கல் பரவலாக உள்ள இந்துமாக்கடல் பகுதியில் கல் மலைகள் வெளிப்பட ஆரம்பித்த காலத்தில்தான்; அண்டபேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண் சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும் இவ்வுலகுக்கு வந்து கற்பாறைகள் மேல் தங்கி தங்களுடைய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சி தை மாதத்தில்தான் நடந்தது. இதுபற்றி மிகத் தெளிவான செய்திகள், மணுநீதி நூல்களிலும், இந்து வேதத்திலும், இந்துவேத நூல்களிலும், இந்துமத நூல்களிலும், ஆதிசிவனாரின் குருபாரம்பரியத்திலும், இலக்கிய பாரம்பரியத்திலும், அரச பாரம்பரியத்திலும் இருக்கின்றன.

(2) இம்மண்ணுலகில் வாழ்ந்த மணீசர்கள் (மண் + ஈசர்கள்= மண்ணின் தலைவர்கள்) விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த நிலைமையினை மாற்றி, அவர்களைப் பக்குவப்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிட அனாதிசிவன்களான மணுநீதியார்கள் இம்மண்ணுலகத்திற்கு வர ஆரம்பித்த காலம் தை மாதமேயாகும்.

(3) ஆதிசிவனார் இம்மண்ணுலகுக்கு வந்த காலம் தை மாதமேயாகும்.

(4) ஆதிசிவனார் இப்பாரில் வாழ்ந்து கொண்டிருந்த ( (பார் = உலகம், வதிந்து கொண்டிருந்த = வசித்துக் கொண்டு இருந்த) பெண்ணான பார்வதியை (பார் + வதி = இவ்வுலகத்தைச் சேர்ந்த பெண்) மணந்து கொண்டது தை மாதத்தில்தான் (தைப்பூச நாளில்).

(5) ஆதிசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த முருகன் தை மாதத்தில்தான்; தைப்பூச மீனில்தான், தைப்பூச யோகத்தில்தான் பிறந்தான்.

(6) தைமாதத்தில்தான் திருப்பாற்கடல் கடையப்பட்டு இலக்குமியும், அமுதும், ஆலகால நஞ்சும் வெளிப்பட்டனர்.

(7) தேவாசுரப் போர் தைமாதத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு தைமாதத்திலேயே நிகழ்ந்தது தேவாசுரப்போர். இந்தப் போர் முடிவுக்கு வந்ததும் தைமாதத்தில்தான்.

(8) முருகன் தேவாசுரப் போரை நிகழ்த்திட அருட்படை (தேவர்களுடைய படை) சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதும் தை மாதத்தில்தான்.

(9) முருகன் தெய்வானையை மணந்ததும், வள்ளியை மணந்ததும் தை மாதத்தில், தைப்பூசத்தில்தான்.

(10) ஆதிசிவனார், இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் திருவிடம் என்ற தீவை தேர்ந்தெடுத்து இந்து வேதத்திற்காகவும், இந்து மதத்திற்காகவும், தமிழ்மொழிக்காகவும் செயல்படத் துவங்கியது தை மாதத்தில்தான்.

(11) ஆதிசிவனார் திருவிடம் எனும் தீவில் தமிழ்மொழிக்காக மருதமரக் காடுகள் இருந்த பகுதியில் மதுரை மாநகரை உருவாக்கத் தொடங்கியதும்; இந்து நதிக் கரையில் இந்து வேதத்திற்காகஅருட்பாஎனும் நகரை உருவாக்கத் துவங்கியதும் அதையடுத்து இந்துமதத்திற்காகமோகம்சிதறாநகரை உருவாக்கத் தொடங்கியதும் தை மாதத்தில்தான். ஆனால், இம்மூன்றையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்தான் அமைத்தார். அதாவது முதலில் முத்தமிழ்ச் சங்கம் நிறுவுவதற்காக மருதை மாநகரை உண்டாக்கினார். அந்நகர் முழுமை பெற்றதும் அங்கு தை மாதத்தில்தான் முத்தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்தார். அதன் பிறகே அதாவது, முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து அங்கு இளமுறியாக் கண்டத்து மக்கள் தமிழ்மொழியை நன்கு கற்றுக் கொண்டபிறகு [சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து] அங்கிருந்த இந்துநதிக் கரையில் இந்து வேதத்திற்காக அருட்பாநகர் என்ற ஒரு நகரை உருவாக்கினார்.
        இந்த அருட்பா நகரில்தான் இந்துவேதங்கள் நான்கும், இந்துவேத நூல்கள் 392உம் (முந்நூற்றுத் தொண்ணூற்று இரண்டு), இந்துவேத சுலோகங்கள் எனப்படும் சூலகங்கள் 4,42,363உம் (நான்கு இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்தி எட்டு) கற்றுக் கொடுக்கப்பட்டன. இப்படி இந்து வேதாகம பாடசாலை அருட்பா நகரில் நான்காண்டுகள் (48 மாதங்கள்) தொடர்ந்து நடத்தப்பட்டு; முழுநிலவு பருவ பூசைகள் 48 இந்துவேதாகம நெறிமுறைப்படி நிகழ்த்தப்பட்டிட்ட பிறகுதான் அருட்பா நகரை யொட்டியே (மோகம் சிதறா நகர்) மோகஞ்சிதறா நகர் உருவாக்கப்பட்டது.

(12) இந்த மோகஞ்சிதறா நகர் இந்துமத நூல்கள் முப்பத்தாறையும் முறையாகக் கற்பிக்கும் பதினெண்சித்தர் பீடத்தைப் பெற்றிருந்தது. இதேபோல் அருட்பாநகர் இந்துவேதங்கள் நான்கையும், இந்துவேத நூல்களையும், இந்துவேத சுலோகங்கள் எனப்படும் சூலகங்களையும் கற்பிக்கின்ற பதினெண்சித்தர் மடத்தைப் பெற்றிருந்தது.

(13) இப்படி மருதை மாநகரைத் தோற்றுவித்ததும், அங்கு முத்தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்ததும்; அருட்பா நகரைத் தோற்றுவித்ததும்; பதினெண்சித்தர் மடத்தைத் தோற்றுவித்ததும்; மோகஞ்சிதறா நகரைத் தோற்றுவித்ததும்; அங்கு பதினெண்சித்தர் பீடத்தைத் தோற்றுவித்ததும் ஆண்டின் முதல் மாதமான தை மாதத்தில்தான். ஆனால் இவையெல்லாம் ஆதிசிவனாரால் தோற்றுவிக்கப் பட்டவை என்பதனால் சிவராத்திரி அன்று அதாவது மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி அன்று அண்ட பேரண்டங்களிலிருந்து ஆண்டு தோறும் மூலப் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் இம்மண்ணுலகுக்கு வந்து தங்குவது வழக்கமாகி விட்டது.

(14) அதாவது மூலப் பதினெண்சித்தர்களும்; பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆண்டு தோறும் முத்தமிழ் சங்கம் தோற்றுவிக்கப் பட்டதையும், பதினெண்சித்தர் மடம் இந்து வேதத்திற்காகத் தோற்றுவிக்கப் பட்டதையும், பதினெண்சித்தர் பீடம் இந்துமதத்திற்காகத் தோற்றுவிக்கப் பட்டதையும் நினைவு கொண்டு தமிழிலக்கியங்கள், இந்துவேத பகுப்புகள் அல்லது பிரிவுகள், இந்துமத நிறுவன நிர்வாகக் கட்டமைப்புகள் முதலியவற்றை யெல்லாம் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் செய்திடுவார்கள்.
இதைத்தான், “மகா சிவராத்திரியில் அண்ட பேரண்டங்களிலிருந்து சித்தர்கள் வருவார்கள்என்றும்; “இந்துவேதம் அருளப்பட்டது அல்லது செம்மைப்படுத்தப் பட்டது சிவராத்திரியில்தான்என்றும்; “மகா சிவராத்திரி அன்றுதான் இந்துமதம் அருளப்பட்டது அல்லது செம்மைப் படுத்தப்பட்டதுஎன்றும் வழக்காற்றுச் செய்திகள் தோன்றின. ஆனால், உண்மையில் இந்து வேதத்தை, இந்து மதத்தை, முத்தமிழ் மொழியை ஆதிசிவனார் அருளத் தொடங்கியது தை மாதத்தில்தான். ஆனால் அது நிறைவு பெற்றது மாசி மாதம் மகாசிவராத்திரி அன்றாக அமைந்திட்டது. எனவேதான் மகா சிவராத்திரிக்கு அதிகம் சிறப்பும், முதன்மையும், எல்லாவிதமான, வகையான வழிபாடுகளுக்கும் உரிய நாளாகக் கருதப்படும் பெருமையும் உரிமையும் ஏற்பட்டிட்டது.

(15) இவை போல் தை மாதத்தில்தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; பிள்ளையார் சித்தி புத்தி முதலியவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; வினாயகர் வல்லபை வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; ஐயனார் அல்லி செந்தாமரை முதலியவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளும்; ... தை மாதத்தில்தான் துவக்கம் பெற்றும் மாசி மகா சிவராத்திரியில் நிறைவு பெற்றிருக்கின்றன. அதாவது இந்துவேதப்படி, இந்து மதப்படி கூறப்படுவது தை மாதமே ஆண்டின் துவக்க மாதம். இதில் தை மாதப் பூசம் எனும் விண்மீனும், மாசி மாதத்தில் மகம் என்னும் விண்மீனும் முதன்மை பெறுகின்றன.

(16) தை மாத முதன்மைக்கு இருக்கும் சிறப்புப் போல் மாசி மாத மகா சிவராத்திரிக்கும் அதிகமாக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இவையே இந்துவேதத்திலும், இந்து மதத்திலும், முத்தமிழ் இலக்கியங்களிலும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
 

சித்தர் நெறியை அறிவோம்! உணர்வோம்!! : பதினெண் சித்தர் பீடம் அழைக்கிறது!




ஓம் குருவே போற்றி                                      ஓம் குருவே துணை                                    ஓம் குருவே எல்லாம்.
வாழ்க தமிழ்                                                                                                                                                 வளர்க சித்தர் நெறி



அன்பு வணக்கங்கள்!

இம்மண்ணுலகில் காலம் தோறும் பல உண்மைகள் பல்வேறு காரணங்களுக்காக மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்துள்ளன. அவை இன்றளவும் தொடர்ந்து கொண்டே உள்ளது. அவற்றில் தற்காலத்திற்கு அவசியமானவைகளை அறிந்து கொள்ளவும், அவற்றின் மீதான தங்களின் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழின குருபீடம், மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அருளிய, லெமூரியா (The Lost Lemuria) எனப்படும் குமரிக்கண்டத்தில் பல இலட்சம் வருடங்களுக்கு முன் தோன்றிய சிவ நெறி, சித்தர் நெறி எனும் மெய்யான இந்து மதத்தின் (ஹிந்து அல்ல) கருத்துக்களும், காலத்தால் மறக்கப்பட்ட உண்மைகளும் மக்களைச் சென்றடையும் அருட்பணியின் ஒரு சிறு பகுதியே இந்த "பதினெண் சித்தர் பீடம்" எனும் "பேஸ்புக் குழுமம்." ஆகும்.
 
https://www.facebook.com/groups/pathinennsiddharpeedam
http://arulatchi.blogspot.com
http://www.indhuvedham.org/?&sitemap
http://www.gurudevar.org
http://www.indhuism.org
  மேற்கூறிய இணைய தளங்களில் காணப்படும் கருத்துக்களும் / கட்டுரைகளும் தமிழின குருபீடம் மக்களுக்கு வெளிப்படுத்திய உண்மைகளில் ஒரு சிறிய பகுதியே, ஓர் அறிமுகம் மட்டுமே. இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன.

தமிழின குருபீடத்தின் அருளுலக ஏற்புச்செல்வர், ஞானத்தந்தை முத்துராச மூர்த்தி அவர்கள் பதினெண் சித்தர் பீடத்தின், தமிழின குருபீடத்தின் மெய்யான இந்து மதம் (ஹிந்து அல்ல) பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், ஆர்வமுள்ளவர்களுக்கு அருளை அனுபவப்பொருளாக வழங்கியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஆனால், அவர் பேஸ்புக் மூலம் கலந்துரையாடுவதை விட நேரில் சந்திப்பதையே விரும்புகிறார். (குறைந்த பட்சமாக தொலைபேசி மூலமான அழைப்புகள் மூலம் உரையாடுவதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.)

ஆகையினால், தங்களைப்போன்ற ஒத்த கருத்துக்களை உடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது மெய்யான இந்து மதக்கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் அல்லது பதினெண் சித்தர்கள் அருளிய பூசை மொழிகளை (பூசா மொழி நூல்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே சுட்டவும்) அறிந்து கொண்டு குருவின் வழிகாட்டுதலின் படி அன்றாட வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் என குறைந்தது 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக சேர்ந்து அழைக்கும் பட்சத்தில், ஞானத்தந்தை முத்துராச மூர்த்தி அவர்கள் தங்களின் வசதிக்கேற்ற இடத்திலேயே நேரில் சந்தித்து அனைத்து குழப்பங்களுக்கான தெளிவுகளும், கேள்விகளுக்கான தக்க பதிலும் அளிப்பதற்க்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

குருவழி நின்று அருளை அனுபவப்பொருளாக பெற்று, நிறைவான வாழ்க்கை வாழ்ந்து, நடமாடும் ஆதாரங்களாக திகழும் ஆயிரக்கணக்கான சித்தரடியார்கள், சித்தரடியான்கள் மற்றும் சித்தரடியாள்கள் போல தாங்களும் அருளை அனுபவப்பொருளாக பெற்றிடவும், இனிமையான வாழ்க்கை வாழ்ந்திடவும், பிறவிப்பயனை அடைந்திடவும் அன்புடன் அழைக்கிறோம்.

வாரீர்...! வாரீர்...! அருளதனை நிரம்பப்பெற்று வாழீர்...!!
குருவருள் துணை புரியட்டும்.


தொடர்புக்கு:
பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை.
31, சிவசக்தி இல்லம்,
மாதவன் நகர், பருப்பூரணி கிழக்கு,
காரைக்குடி – 630 001.
Mob: 098653-25309.
E-Mail: arulatchi.info@gmail.com

காயந்திரி மந்தரம் பற்றி சித்தர் ஏளனம்பட்டியார்:



    தமிழில் அக்கலையில்லையே! இக்கலையில்லையே! என்று கூறுபவர்க்குப் பதில் கூறும் வண்ணமாகத்தான் இ.ம.இ. (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) மத மறுமலர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. தமிழில் உள்ள எண்ணற்ற வகையான மந்திறங்களை (மந்தர, மந்திர, மந்திறம் போன்ற பூசைமொழி நூல்கள்) வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முதல் கட்டமாக இந்துமதத் தந்தை, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் கருவூறார் வாழ்த்துதலுடன் கோப்புகளிலிருந்து முதன் முதலாகக் 'காயந்திரி மந்தரம்' என்ற தொகுப்பை விரிவான வரலாற்று விளக்கத்தோடு வெளியிடுகின்றோம். 'காயத்திரி மந்தரம்' என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத.... வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான.... வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.
"ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!"
 
இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.

    ஆரியர்களுக்காகச் சித்தர்கள் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு புதிய ஒரு மொழியைச் 'சமசுக்கிருதம்' (சமம் = தமிழுக்குச் சமமாக; கிருதம் = செய்யப்பட்டது) என்ற பெயரில் படைத்தனர். ஏற்கனவே ஆரியர்கள் பேச்சு வழக்கில் வைத்திருந்த சொற்களையும், உச்சரிப்பு முறைகளையும் அப்படியே ஏற்றுப் போற்றிப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய மொழி பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என்பதற்காகத்தான் 'சமம்' என்ற தமிழ்ச் சொல்லையும் 'கிருதம்' என்ற ஆரியரின் பேச்சு வழக்குச் சொல்லையும் இணைத்துச் 'சமசுக்கிருதம்' என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

    ஆரியர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்ற போதும் தங்களின் மொழி எழுத்துக்களை இந்தியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி வைத்துக் கொண்டனர். ஆனால், இந்தியாவின் மூலமொழியாகவும், இந்துமதத்தின் ஆட்சி மொழியாகவும், சித்தர்களின் ஞானங்களையும், விஞ்ஞானங்களையும், அறிவியல்களையும் விளக்கிடும் கலைச் சொற்களை உடைய மொழியாகவும் இருக்கின்ற தமிழ் மொழியினின்று வேறுபட்ட எழுத்தோ, ஒலிநயமோ, இலக்கிய இலக்கணமோ.... உடைய மொழியாக ஆரியமொழி வடிவப்பட்டால் ஆரியர் என்றைக்குமே இந்தியர்களோடு (தமிழர்களோடு) கலந்து வாழ முடியாது. எனவேதான், சித்தர்களின் மொழியறிவு, நூலறிவு, தத்துவ அறிவு, மதஞானம், பொருள்ஞானம், கலைஞானம்.... முதலிய அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்ட ஒரு மொழியாக ஆரியர்களின் பேச்சுமொழி எழுத்துடைய மொழியாக்கும் பொறுப்பு சித்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

     புதியவைகளையும், புதுமைகளையும் வரவேற்கும் புரட்சியாளர்களான பதினெண் சித்தர்கள் பெரிதும் முயன்று இந்துமதத்துக்குத் துணையாகப் பயன்படக் கூடிய ஒரு புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் சமசுக்கிருதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குறிப்பிட்ட அளவு சமசுக்கிருத மொழி எழுத்தும் இலக்கியமும் பெற்றவுடன் ஆரியர்கள் சித்தர்களின் சமசுக்கிருத மொழி உருவாக்கும் பணியில் மிகுதியாகத் தலையிட்டனர்.

     தமிழில் இருந்து வரும் இலக்கியங்களை முழுமையாக மொழிபெயர்க்க விடாமல் சமசுக்கிருதத்தில் ஆரியக் கற்பனைகள், கதைகள், இதிகாசங்கள், பூசைக்குரிய வாசகங்கள், ஒலிகள், மதநூல்களின் பெயர்கள், கடவுள்களின் வரலாறுகள்.... முதலியவைகளையெல்லாம் அப்படியே புதிய மொழிபெயர்ப்புக்களில் புகுத்தி மாயமான, பயனற்ற கற்பனையான, ஏமாற்றான, தவறான, சூழ்ச்சியான,..... இலக்கியங்களைப் படைத்தனர். இதனால், அண்டபேரண்டமாளும் தமிழ்மொழியின் மெய்ஞ்ஞான, புறஞான, விஞ்ஞான, பொருள்ஞான, அருள்ஞான இலக்கிய இலக்கணங்கள் உலக மக்களுக்குக் கலப்படமின்றி, சிதைவின்றி, குறைவின்றி, மறைவின்றிக் கிடைக்க முடியாமல் போகும் ஆபத்து விளைந்தது.

     அதனால், சித்தர்கள் தங்களுடைய ஒத்துழைப்பையும், முயற்சியையும் ஆரியப் பண்டிதர்களுக்குத் தர மறுத்து விட்டார்கள். அதனால்தான், தமிழில் நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று பதினாறு இருந்தும்; தமிழில் உள்ள நான்கு வேதங்களின் பெயர்களைத் தழுவியே 1. இருடிவேதத்தை இருக்கு வேதம் 'ரிக்வேதம்' என்றும், 2. அசுர வேதத்தை யசுர்வேதம் 'யஜுர்வேதம்' என்றும், 3. யாமவேதத்தை (இரவில் கூறும் சாமவேதம்) 'ஸாமவேதம்' என்றும், 4. அதர்வான வேதத்தை 'அதர்வணவேதம்' என்றும் மாற்றினார்கள்.

     ஆனால், இந்த சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், பூசை..... முதலிய அனைத்துமே கோடியில் ஒரு பங்கு கூட தமிழ் வேதங்களால் செய்யப் படுவனவற்றால் கிடைக்கும் பயன் போலத் தர முடியாதவை. இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன. குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்.... எல்லாம் சித்தர்களின் மரபுப்படி 'இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்' (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு) 'அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்' 'அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்' செய்ய்பப்பட வேண்டும் என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை..... முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் 'கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,..... எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்.... என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.

     இதேபோல் தமிழில் உள்ள மூன்று நேமங்கள், மூன்று நியமங்கள், மூன்று நிடதங்கள், மூன்று நிட்டைகள் என்ற பன்னிரண்டில் சித்தர்கள் 'நிடதம்', 'இணை நிடதம்', 'துணை நிடதம்' என்ற மூன்றில் 'துணைநிடதம்' என்பதை மட்டும் சமசுக்கிருதத்தில் உபநிடதம் என்று 108 கருத்துக்களை மொழி பெயர்த்த அளவிலேயே ஆரியருடன் தகராறு ஏற்பட்டுச் சமசுக்கிருதத்தை உருவாக்கும் பணி நிறுத்தப்பட்டது. வரலாற்றின் படி தமிழ்மொழியிலிருந்து சமசுக்கிருதத்திற்கு மொழி பெயர்க்கும் பணி இந்த 108வது உபநிடதம் மொழிபெயர்க்கப் படும்போதுதான் சித்தர்களுக்கும் ஆரியர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இத்துடன் இந்த 'உபநிடதம்' மொழி பெயர்க்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இதனாலேயே உபநிடதம் இன்றும் முழுமைபெறாமல் அரைகுறையாகவே உள்ளது என்பது தெளிவான உண்மை. தமிழில் உள்ள சூத்திறங்கள், சூத்திரங்கள், சூத்தரங்கள் சமசுக்கிருதத்தில் 'சூக்தங்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்த அளவிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. இதேபோல், தமிழிலுள்ள சுருதிகள் 'ஸ்மிருதிகள்' என்று சமசுக்கிருதத்தில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்த அளவிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.

    இப்பணிகளின் வரலாறு போலத்தான், காயந்திரி மந்தரம், காயந்திரி மாந்தரம், காயந்திரி மாந்தரீகம், காயந்திரி மந்திரம், காயந்திரி மந்திறம் எனும் ஐந்தில் காயந்திரி மந்தரம் என்பது மட்டும் சித்தர்களால் ஆரியர்களின் மிகப் பெரிய வேண்டுகோளுக்கு இணங்கிக் காயத்ரீ மஹாமந்த்ரம் (= காயந்திரி மகா மந்தரம்) என்ற பெயரில் சமசுக்கிருதத்தில் உருமாற்றித் (ந் -> த், த -> த் என்ற இரண்டு எழுத்து மாற்றங்கள்) தரப்பட்டது.

   மற்றபடி வாசகத்தின் பொருளை சமசுக்கிருதத்தில் விரிவாக எழுத முற்பட்ட சித்தர்களை ஆரியர்கள் தடுத்து; "......கருத்து முக்கியமல்ல; ஒலிகள்தான் முக்கியம். தமிழில் காயந்திரி மந்தரம் சொல்லப்படுவது போலவே சமசுக்கிருதத்திலும் சொல்ல வேண்டும். மந்திர ஒலிகள் ஓதும்போது தமிழைப் போலவே இருக்க வேண்டும்......" என்று கூறிப் பிடிவாதம் பிடித்தனர். ஆனால், சித்தர்களோ, "அது மக்களை ஏமாற்றுவதாகிடும், ஒரு பயனும் பொருளற்ற அருள்வாசகத்தால் (=மந்திரத்தால்) ஏற்படாது....." என்று கூறினர். கருத்து மாறுபாடு வலுப்படவே ஆரியர்கள் தாங்களாகவே தங்கள் விருப்பம் போல் காயத்திரி மந்திரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்.... என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு. இதனையுணர்ந்துதான்,

1. காலை, மாலை காயந்திரி மந்தரம்
(காலை = சூரியன் தோன்றி ஒருசாமம் 6 - 8 1/2; மாலை = சூரியன் மறைய ஒரு சாமம் 4 1/2 - 6)

2. உருமவேளை = நடுப்பகல் = உச்சிவேளைப் பூசையில் காயந்திரி மாந்தரம்
(பகல் 11 - 1 1/2)


3. நள்ளிரவுப் பூசையில் காயந்திரி மாந்தரீகம்

(நடுயாமம், நடுச்சாமம், இலைக் குலுங்கா நடுநிசியிரவு 11-1 1/2)

4. பகலில் எப்போது பூசை செய்தாலும் காயந்திரி மந்திறம்
(காலை, உருமம் தவிர)

5. இரவில் எப்போது பூசை செய்தாலும் காயந்திரி மந்திரம்

(நள்ளிரவு தவிர)
பயன்படுத்தப்படல் வேண்டும் என்ற மரபைப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் ஏற்படுத்தினார்.

  சித்தர்கள் ஆரியர்களுக்குக் 'காயந்திரி மந்தரம்' சொல்லிக் கொடுத்ததால்தான் அவர்கள் காயந்திரி மந்தரம் போன்ற ஒலி அமைப்புடைய 'காயத்ரீ மஹாமந்த்ரம்' என்ற போலி மந்திரத்தைச் சமசுக்கிருதத்தில் உண்டாக்கினர். அதனால், மற்ற நான்கையும் நேரடியாகக் குருவழி வாரிசுகளுக்கும், விந்து வழி வாரிசுகளுக்கும் குறைந்தது பதினெட்டாண்டுகளுக்கு மேலும் அருளுலகப் பயிற்சிகளைப் பெற்றுக் குருவின் நம்பிக்கையும் பெற்றிட்டால்தான் கற்பிக்கலாம் என்ற கடுமையான சட்டத்தை ஏற்படுத்தினர். இந்த நான்கும், இன்றைக்குப் பெரும்பாலும் காடுகளிலும், மலைகளிலும், தீவுகளிலும்.... தொடர்ந்து கடுந்தவம் புரிபவர்களிடமே வாழுகின்றன. எனவேதான், 'காயந்திரி நான்கையும் கற்கக் காடு, மலை, தீவு, வனாந்தரமெல்லாம் அலைந்தாலும் வருத்தும் ஊழும் விதியும் இன்றிக் கற்க இயலாது - குருவாக்கு, குருவாசகம்' என்ற வாசகம் பிறந்தது..... என்று பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் குருபாரம்பரிய வாசகம் குறிக்கிறது.

    அதாவது, ஆரியர்கள் ஒன்பதாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், சித்தர் வைகையாற்றங்கரைக் கருவூறாருக்குப் பிறகே இந்தியாவுக்கு வந்தனர்; அதன் பிறகே, சமசுக்கிருத மொழி உருவாக்கப்பட்டது என்ற செய்திகள் இதனால் தெரிகின்றன. மேலும், ஆரியர்கள், தமிழிலிருந்து பிறக்கப்பட்ட சமசுக்கிருத மொழிதான் தமிழுக்கும் முந்தியது என்று பொய் கூற ஆரம்பித்ததால், இந்துமத வரலாறு, தமிழின அரசியல் வரலாறு, தமிழின் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, இந்துமதத் தத்துவங்கள், செயல் முறைகள்.... முதலிய அனைத்திலும் கலக்கம், குழப்பம், ஐயம், சந்தேகம், கற்பனை, பொய், காட்டுமிராண்டித்தனமான மடமை, கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள், அறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகள், சுரண்டல் முறைகள், முதலாளிகள் ஆதிக்கப் பிடிப்புக்கள், வறுமையை நியாயப்படுத்துதல், அடிமையுணர்வை உரம்போட்டு வளர்த்தல், முழுக்க முழுக்க கடவுள் ஒன்றே என்ற வறட்சி வாதம், வழிபாடுகளில் பலி மறுக்கப்படல், இறைச்சி, மீன், முட்டை.... முதலியவை படையல் பொருள்களாக இருப்பதைத் தவிர்த்தல், பெண்ணையும், பெண்ணின்பத்தையும் மறுத்தல், வெறுத்தல், பழித்தல், இழித்தல்.... எனும் ஆரியக் கருத்துக்களை வளர்த்தல், உருவ வழிபாட்டை மறுத்தல், விண்ணவர், மண்ணவர், அண்டத்தவர், பேரண்டத்தவர், அண்டபேரண்டத்துக்குரிய பிண்டத்தவர்.... என்பவரே வழிபடுநிலை பெறும் ஈசுவரர்கள், எல்லாக்கள்(அல்லா), ஆத்தாக்கள் (தாய்கள்), தாத்தாக்கள், அப்பன்கள் (தந்தைகள்), ஆயாக்கள், இறைகள், கடவுள்கள், தெய்வங்கள், ஆண்டவர்கள், தேவர்கள் எனப்படுகின்றனர் என்ற பேருண்மையை உணரமுடியாமல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற கேடுகள் இந்துமதத்துக்கு வந்து விட்டன. எனவேதான், பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியும், பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியும் சமசுக்கிருதத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள்.

     ஆனால், தமிழர்கள் இன ஒற்றுமையும், பற்றுணர்வும், மான உணர்வும் இல்லாதவர்களாக மாற்றப்பட்டு விட்டதால் தமிழ் மொழிப்பாசமோ, பற்றோ, ஈடுபாடோ, விருப்போ... இல்லாமல் தமிழினத்துக்கும் தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதிகளாக இருப்பவர்களையே நம்பி ஆதரித்துப் போற்றி மெலிந்து நலிந்து இழிவடைந்திட்டனர். இன்னும் சொல்லப் போனால், தமிழர்களில்தான் தமிழினத் துரோகிகளும், தமிழ்மொழி விரோதிகளும், தமிழ்நாட்டுப் பகைவர்களும் அதிகமாகத் தோன்றுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமேயானால், இந்துமதத்தின் மறுமலர்ச்சி ஒன்றுதான் வழி! தமிழர்களுடையதே இந்துமதம்! ஆரிய வருகைக்கு முன்பே இந்தியாவில் இருந்ததுதான் இந்துமதம்! இளமுறியாக் கண்டத்தில் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதினெண் சித்தர்களால் தங்களுடைய தாய்மொழியான தமிழ்மொழியில் இம்மண்ணுலக ஈசர்களான மணீசர்களுக்கு வழங்கப்பட்டதுதான் இந்துமதம்! 'இந்து' என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு ஆதியிலேயே நாற்பத்தெட்டுப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன! இந்துமதத்தவர் வாழும் நாட்டின் பெயராகத்தான் 'இந்தியா' என்ற சொல் பிறந்தது. 

     இளமுறியாக் கண்டத்தில் இருந்த 1. பஃறுளி 2. குமரி 3. இந்து 4. கங்கை 5. யமுனை 6. பிறம்மா 7. சிவா 8. மாயோன் 9. இந்திரன் 10. தேவேந்திரன் 11. எமன் 12. முருகு 13. எல்லா 14. இறை 15. கடவுள் 16. தெய்வம் 17. ஆண்டவர் 18. தேவர் ..... எனும் பதினெட்டு ஆறுகளும் புகழ் பெற்றவை, புனிதமானவை. இளமுறியாக் கண்டம் கடலுக்குள் மறைந்த பிறகு தோன்றிய இன்றைய வட இந்தியாவில் தோன்றிய ஆறுகளில் சிலவற்றிற்கு இளமுறியாக் கண்டத்து ஆறுகளின் பெயர்களே வைக்கப் பட்டன. அதன்படி, 'இந்து' என்று பெயரிடப்பட்ட ஆறுதான் காலப் போக்கில் சிந்து என்று மாறிற்று. இவற்றையெல்லாம் மீண்டும் தமிழர்கள் உணர்ந்தால்தான் இந்துமதம் மறுமலர்ச்சியும், வளவளர்ச்சியும், செழுச்சிமிகு ஆட்சியும் பெற்றிட முடியும். இதற்காகத் தமிழர்களை அடிப்படையாகக் கொண்ட உலக வரலாறு மூன்று பெரும் பிரிவுகளாக எழுதப்பட்டன. 1. குருபாரம்பரியம் (இந்துமத வரலாறு = உலகமத வரலாறு (Religious History of the World) 2. அரச பாரம்பரியம் (உலக அரசியல் வரலாறு (The Political History of the World) 3. இலக்கிய பாரம்பரியம் (The History of the First Language of the mankind, the Tamil and the History of the Tamil Literature) எழுதப்பட்டன. இவை, தொடர்ந்து எழுதப்படும் மரபும் தோற்றுவிக்கப்பட்டு இடையிடையே நின்றிட்டன. இதற்கும் காரணம், தமிழர்களின் இனப்பற்றின்மை, மொழிப்பற்றின்மை, நாட்டுப்பற்றின்மை, வரலாற்றறிவு இன்மை.... முதலியவைதான்.

    இவற்றையெல்லாம் எண்ணியே இந்த ஏளனம்பட்டியான் ஏடெடுத்து எழுதுவதிலேயே முழுக்காலத்தையும் செலவழிக்கத் தொடங்கி விட்டான். சித்தர்கள் சமசுக்கிருதத்தைச் சித்தர்களின் அருளுலக இலக்கியங்களால் உயிரூட்டியதும் தெய்வீகத் தன்மை பெறச் செய்ததும் பாம்புக்குப் பால் வார்த்தது போன்ற செயலே என்றுணர்ந்து வருந்தினர். அவர்களின் வருத்தம் பெருநெருப்பாக ஆகுமாறு பல ஆரியர்கள் 'சமசுக்கிருத மந்திரங்களால்தான் இந்துமதப் பூசைகளும் சடங்குகளும் செய்ய வேண்டும்' என்று கூறி இந்துமதத்தைச் செயல்நலம் குன்றச் செய்தார்கள். இதனால், சித்தர்கள் சாபமிட்டுச் சமசுக்கிருத மொழி பேச்சு வழக்கற்றுப் பிணமாகுமாறு செய்தனர். எனவேதான், இன்றுவரை சமசுக்கிருதம் ஆரியர்களால் கூடப் பேசமுடியாத ஒன்றாகி விட்டது. இந்தப் பிணத்தால் இந்துமதம் நலிவடைவதைத் தடுத்தேயாக வேண்டும். அதற்காகத்தான் காயந்திரி மந்தரம் அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது.

     ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி.... முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்.... என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்) ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்.... பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.

ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்.... முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி.... எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.

வேண்டுகோள் வாசகம் (காப்பு):
ம் பராசத்தி நமச்சிவாய!
ஓம் நமச்சிவாய பராசத்தி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவாவாசி! ஓம் சிவாவாசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் சிவவசி! ஓம் சிவவசி!
ஓம் உண்டங்களே! பிண்டங்களே!
உயிரினங்களே! பயிரினங்களே!
அண்டங்களே! பேரண்டங்களே!
அண்டபேரண்டங்களே!
விழிச்சி கொள்க! எழுச்சி கொள்க! செழிச்சி பெறுக!
யாமே அனைத்துமாக உதவுக!
காயந்திரி மந்தரம் கூறுகிறேன்!
பயனாகட்டும்! சுவையாகட்டும்!
முற்பிறப்பும் மறுபிறப்பும்
இப்பிறப்பிலேயே நிறைவாகட்டும்!
ஆவி ஆன்மா உயிர் மூன்றும் ஒன்றாகட்டும்!
அனைத்துக்கும் தாயாக! ஆயாவாக!
அப்பனாக! தாத்தாவாக! இருப்பவர்களே!
ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக! ஏற்றிடுக!
 
உறையினின்று வாளை எடுத்து உள்ளே போடுவது போல காயந்திரி மந்தரம் சொல்லுவதற்கு முன்னும் பின்னும் இந்த வேண்டுகோள் வாசகங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாசகங்கள் பூசையின் ஆரம்பத்தில் கற்பூரம் ஏற்றியோ, புகைமூட்டியோ, யாகம் வளர்த்தோ, விண்மீன் பார்த்தோ, சூரியன் பார்த்தோ, நிலவு பார்த்தோ ஒரு முறை சொல்லப்பட்டவுடன் காயந்திரி மந்தரம் (108) நூற்றெட்டுத் தடவைகள் ஓதப்படல் வேண்டும். பூசை முடிக்கும் போது மேற்படி வாசகங்கள் ஒரு முறை சொல்லப்படல் வேண்டும். பக்குவத்துக்கேற்பக் கண்ணை மூடியோ, திறந்தோ காயந்திரி மந்தரம் ஓதலாம். ஓதும்போது இடையிடையே கண்ணைத் திறந்தும் மூடியும் ஓதலாம். அமர்ந்தோ, நின்றோ, ஒரே திசை பார்த்தோ, எட்டுத் திசையும் சுற்றியோ....... காயந்திரி மந்தரம் ஓதலாம்!


சமசுக்கிருதத்தில்
'ஸ்ரீகாயத்ரீ மஹா மந்த்ரம்'

ஓம் பூர்புவஸ்ஸுவ!
தத்ஸ விதுர் வரேண்யம்!
பர்கோ தேவஸ்ய தீ மஹி!
தியோ யோந! ப்ரசோத யாத்!
என்று ஆரியராலும், சமசுக்கிருதப் பற்றுடைய தமிழராலும் ஓதப்படுகிறது. இது தவறு, இது எந்தச் சத்தியையோ! சித்தியையோ! முத்தியையோ!... தரவே தராது. இது பத்திக்குப் பயன்படாது. எனவே, ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.

     அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும். இந்துமதமே உலக மானுடரைக் காக்கும்.

சித்தர் ஏளனம்பட்டியார்
முதல் இ.ம.இ. தலைவர்
(கி.பி. 1772இல் எழுதப்பட்டது.)

காயந்திரி மந்தரம் ≠ காயத்ரீ மகாமந்த்ரம்



      ‘காயம் + திரி + மந்திரம் = காயந்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு. 

      “மெய் உய்ய,  மெய்யும் உயிரும் வாய்மை பெற,  பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட,  அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயந்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது.

     பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது. 

     'காயத்ரீ மந்த்ரம்' என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத.... வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான.... வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.

ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!"


இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.
"அனைவரும் ஓதிப் பயனடையட்டும்"
"தனிமனிதச் செழுச்சியே இந்துமதம்"
"தனிமனித வழிபாட்டு ஈட்டமே கூட்டுவழிபாடு"
-குருபாரம்பரியம்
      சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், பூசை..... முதலிய அனைத்துமே கோடியில் ஒரு பங்கு கூட தமிழ் வேதங்களால் செய்யப்படுவனவற்றால் கிடைக்கும் பயன் போலத் தர முடியாதவை.  இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன.  குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்.... எல்லாம் சித்தர்களின் மரபுப்படி 'இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்' (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு),  'அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்'  'அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்' செய்ய்பப்பட வேண்டும்' என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை..... முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் 'கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,..... எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்.... என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.

    காயத்ரீ மந்த்ரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்.... என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு. 

  • காயந்திரி மந்திரங்கள் தமிழர்களுடையவைதான். தமிழில்தான் முதன் முதல் பதினெண் சித்தர்களால் படைக்கப்பட்டன.
  • காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.
  • காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.
  • சூரியனை முழுமுதலாகக் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தொழுவதுதான் காயந்திரி மந்தரம்.
  • சாதாரண மானுட வாழ்வில் கடவுளின் அருளைத் தேவையான அளவு பெற்று நிம்மதியும், நிறைவும், அமைதியும், அன்பும் உடைய வாழ்வு வாழ்ந்திடக் காயந்திரி மந்தரம்தான் பேருதவி புரியும். அன்றாடம் 108 முறை ஓதினால் போதும். எல்லா நலங்களும், விழிச்சிகளும், எழுச்சிகளும், செழுச்சிகளும் ஏற்பட்டிடும்.
  •  
     ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி.... முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்.... என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்).  ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்.... பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.
     ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்.... முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி.... எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.

     ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.

     அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும்.
இந்துமதமே உலக மானுடரைக் காக்கும்.

காயந்திரி மந்தரம் பற்றிய சித்தர் காகபுசுண்டரின் விளக்கம் மற்றும் மறைமலையடிகளின் கருத்து



     சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் இவ்வுலக மாபெரும் மார்க்சீயச் சிந்தனையாளர்களுள் ஒருவர். ஆனால், இவர் கடவுள் மறுப்பாளராகவோ, வெறுப்பாளராகவோ, மத எதிர்ப்பாளராகவோ, நாத்திகராகவோ வாழவில்லை. இவரை இலெனின், மாவோ,... போன்றவர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் திரு எம்.என்.ராய்.

     திரு எம்.என்.ராயும் இவரும் (M.N. Roy and M.P. Pillai founded the International Communist Party and the Radical Democratic Party) உலகக் கம்யூனிச இயக்கம் அமைப்பையே தோற்றுவித்த மூலவர்கள். இவர்களே இந்தியாவுக்காகச் சிறப்பாகப் 'பகுத்தறிவுக் குடியரசுக் கட்சி' என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

   திரு எம்.என். ராயும், டாக்டர் ஐன்சுடீனும் (அணுக்கொள்கையைக் கண்டறிந்த செர்மானிய நாட்டு யூத இன விஞ்ஞானி) சேர்ந்து செர்மனியில் உருவாக்கிய 'உலக மத ஆய்வுக் குழு' (The World Religious Research Society - T.W.R.R.S.) எனும் அமைப்பின் தலைவராக இந்திய மண்ணில் வாழையடி வாழையென வரும் சித்தர்களின் வழி வந்த சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளையே நியமிக்கப்பட்டார்.

   சித்தர் காகபுசுண்டருக்கு நேரடியாகச் சமசுக்கிருத மொழியில் மிகுந்த புலமையை வளர்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமுண்டு. ஆனால், மாக்சுமுல்லரின் (Maxmueller) ஆங்கில நூல்கள் மூலம் சமசுக்கிருத இலக்கிய உலகைப் புரிந்து; கி.பி. 1772 இல் இந்து மறுமலர்ச்சி இயக்கம் அமைத்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் (கண்டப்பக் கோட்டைக் கருவூறார்) உ. இராமசாமிப் பிள்ளை அவர்கள் சமசுக்கிருத மொழி பற்றிக் கூறிய கருத்துக்களை ஆராய்ந்தார்.

    இது பற்றி இவர், ".... நான் எதையும் சிந்தித்து ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் மார்க்சீயவாதி. மார்க்சீயம் எவரையும் நேர்மையான சிந்தனையாளராக்கும். சமசுக்கிருத மொழியை வெறுப்பதும், மறுப்பதும், எதிர்ப்பதும் தேவைதானா என்ற கருத்துப் போராட்டம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

     தமிழிலிருந்த காயந்திரி மந்தரம் என்பதை ஆரியர்கள் அழித்திடவே அதே போன்ற ஒலியையுடைய 'ஸ்ரீகாயத்ரீ மஹாமந்த்ரம்' ஒன்றைப் படைத்தார்கள். ஆனால், தமிழிலுள்ள காயந்திரி மாந்தரம், மாந்தரீகம், மந்திறம், மந்திரம் எனும் நான்கை ஆரியர் அறியமுடியாதபடி சித்தர்கள் காத்திட்டதால்தான் அவை பிழைத்தன என்ற கருத்தைத் தமிழ்ப் பெரியார் மறைமலையடிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி இது பற்றிய அவரின் கருத்தைக் கேட்டேன். அவர் கூறிய பதில் கண்டப்பக் கோட்டைக் கருவூறார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையின் கருத்தையே வலிமைப் படுத்தியது. எனவே, ஒரு மார்க்சீயவாதி என்ற முறையில் நான் மறைமலையடிகளாரின் கருத்தை அப்படியே குறித்து வைக்கிறேன்.

மறைமலை அடிகள்: 'காயத்ரீ ஜெபம் என்பது வெறும் ஏமாற்றே. அந்த மந்தரத்தைச் சொல்லிச் சத்தி பெற்றவர்களோ! சித்தி பெற்றவர்களோ! கிடையாது. நமது தேவார, திருவாசகப் பாடல்களுக்கு இருக்கிற சத்தியில் கோடியில் ஒரு பங்கு கூட இதற்கு இல்லை.

   சமசுக்கிருத பண்டிதர்கள் யாரும் இந்தக் காயத்ரீ மந்த்ரத்திலுள்ள சொற்களுக்கு எந்தக் குறிப்பிட்ட நிகண்டையோ (அகராதி Dictionary) குறிப்பிட்டுப் பொருள் சொல்லுவதில்லை. இந்த மந்தரப் பாடலும் இலக்கண நூலுக்கு ஒத்ததாக இல்லை. எனவே, இது தமிழிலிருந்த மந்தரத்தின் ஒலியை மட்டும் அப்படியே பின்பற்றி உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். சித்தர் ஏளனம்பட்டியார், 'பதினெண்சித்தர் பீடாதிபதிக்குத்தான் காயந்திரி மந்தரத்தை வெளியிட உரிமையுண்டு' என்று கூறிச் சென்று விட்டதால், தமிழில் உள்ள காயந்திரி மந்தரம் தெரிய முடியவில்லை. அதனால், சமசுக்கிருதக் காயத்ரீ மந்த்ரத்தைத் தமிழில் முதலில் தோன்றிய காயந்திரி மந்தரத்தோடு ஒப்பிட முடியவில்லை.

   இன்றைய சமசுக்கிருதப் பிரியர்கள் காயத்ரீக்குக் கூறும் பொருள் உண்மையானதல்ல. எந்த ஒரு சொல்லுக்கும் அவர்கள் கூறும் பொருள் உண்மையில் அச்சொல்லுக்குரியதல்ல; வலிந்து இவர்களாகக் கூறியதேயாகும்.

ய = எவர்
ந = நம்முடைய
திய = புத்தியை
ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ
தத் = அப்படிப்பட்ட = (பரப்ரஹ்மம்)
தேவஸ்ய = ப்ரகாசனான
ஸவிது = உலகை உண்டு பண்ணுபவருடைய, அதாவது சூரியன், சிவன், நாராயணன்... என்போருடைய
வரேண்யம் = மிக உயர்ந்ததான
பர்க = தேஜஸ்ஸை
தீமஹி = தியானம் செய்கிறோம்.

     அதாவது, அறிவை நல்ல விஷயத்தில் பிரேரணை செய்யப் பழக்குகிறோம் எனப்படும் இப்பொருள்களைக் காசிச் சமசுக்கிருதப் பண்டிதர்கள் கூட இலக்கிய இலக்கண ஆதாரம் காட்டி மெய்ப்பிக்கவில்லை... ' என்று **மறைமலை அடிகளார் கூறினார்."

(** இங்கே மறைமலை அடிகளாரின் தூய தனித் தமிழ் நடையில் பதில் இல்லை. அதாவது ம.பழனிச்சாமிப் பிள்ளை சித்தர் காகபுசுண்டர் தமது சொந்த நடையில் மறைமலை அடிகளாரின் கருத்தை எழுதியுள்ளார்.)


குறிப்பு: ஆரியர்களால் ஓதப்படும் காயத்ரீ மஹாமந்த்ரத்தில் உள்ள சில சொற்களுக்குப் பொருளில்லை என்று மறைமலை அடிகளே கூறியுள்ளார். அவையாவன:

1. பூர் 2. புவஸ் 3. தியோ 4. யோந 5. விதுர

காயந்திரி மந்தரம் முன்னுரை



     இந்துமதம் என்றால் என்ன? அது, எப்போது? எங்கு? எவரால்? ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் குரு யார்? குருகுலம் எது? அதன் மூலக் கோயில் எது? மூது நூல் எது? முதன்மையான வழிபாடு என்ன? தத்துவம் என்ன? சித்தாந்தம் என்ன? அது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன? வாழ்க்கைப் பயன் என்ன? முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன? சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு....... முதலியவை பற்றிக் கூறுவதென்ன' என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர். மேற்கூறிய வினாக்களுக்குச் செயல் விளக்கமாக மந்திரங்கள், பூசாவிதிகள், சடங்குகள், நெறிகள், சம்பிறதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஒழுகலாறுகள்..... முதலியவைகளைத் தெளிவான, அழகான, எளிமையான, பயனுடைய இலக்கியங்களாகத் தரக்கூடிய மொழிதான் இந்துமதத்தின் மூலமொழி, தாய்மொழி, முதல்மொழி, பூசைமொழி, அருளாட்சி மொழி, மதப்பயிற்சி மொழி, தேவமொழி.... எனும் தகுதியைப் பெற்றிடும்.

     இந்த வரையறுக்கப்பட்ட கருத்தின்படிதான் (definition) இந்துமத வரலாறும், விளக்கமும் வழங்கப்படல், விளக்கப்படல் நிகழ வேண்டும். அப்பொழுதுதான், இந்து மதத்துக்குள் உள்பூசல், போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சண்டை, சச்சரவு, சுரண்டல், ஏமாற்று, தவறான வழிநடத்தல், மடமை, அறியாமை, புரியாமை, மதவிரோதம், மதத்துரோகம், மதமறுப்பு, மதவெறுப்பு, (மதக் காட்டிக் கொடுப்பு) முதலியவைகளை முழுமையாக வெல்ல முடியும்.

     இப்படிச் சிந்திப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்க வளவளர்ச்சிச் சிந்தனையாக இருக்க முடியும்.

     தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகவாதத்தைத் துவக்கி வளர்த்தபோதும்! அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவே இல்லை! அவர், பார்ப்பன மறுப்பு! வெறுப்பு! எதிர்ப்பு! என்ற கருத்தில்தான் இந்துமதத் தலைவர்களாகப் பார்ப்பனர் இருப்பதையும், பார்ப்பனர் மொழியான சமசுக்கிருதம் இந்துமத ஆட்சிமொழியாக இருப்பதையும் கண்டித்தார்! பழித்தார்! அவரே, தமிழ்மொழி இந்துமத ஆட்சிமொழியாவதையும், தமிழர் குருக்களாவதையும், அனைவரும் கோயில் 'கருவறைக்குள்' சென்று வழிபாடு செய்வதையும் ஆதரித்தார்! வரவேற்றார்! வலியுறுத்திப் போராடினார்.

     எனவே, 'பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் சிங்கம், தமிழினத்தந்தை, பெரியார் ஈ.வெ.ரா. இந்துமதத்தைச் சீர்திருத்தும் ஒரு மாபெரும் வீரச் சீர்திருத்தக் காரராகத்தான் வாழ்ந்தார்.....' என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணியை எழுச்சியும், செழுச்சியும், உயர்ச்சியும் உடையதாக்கிடும்.

திட்டங்கள்:(1) இந்துமதம், பார்ப்பனர் என்று கூறப்படும் வட ஆரியரின் வருகைக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் பதினெண் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

(2) இந்துமதத்துக்குப் பதினெண் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தார்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும்..... பிற அருட் சித்தியாளர்களும் உருவாக்கிச் சென்றுள்ள விந்துவழி வாரிசுகளும், கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளுமே குருமார்கள், தலைவர்கள், அருட்தளபதிகள். எனவே பார்ப்பனர் யாரும் இந்துமதத்தின் குருவாகவோ! தலைவராகவோ! தளபதியாகவோ!...... இருக்கவே முடியாது! முடியாது!! முடியாது!!! முடியவே முடியாது!

(3) பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி! அருள்மொழி! பூசைமொழி! பத்திமொழி! சத்திமொழி! சித்திமொழி! முத்திமொழி!.... எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.

குறிப்பு: சித்தர்களின் சாபத்தால் செத்துப் போன ஒரு மொழியே சமசுக்கிருத மொழி. இந்த உயிரற்ற மொழியில் கூறப்படும் மந்திரம், சாத்திறம், தோத்திறம், ஆகமம், உபநிடதம், வேதம்..... முதலிய அனைத்துமே பயனற்றவை, பிணத்துக்குச் சமமானவையே.

(4) ஆரியர்களின் வேதமதத்துக்குத் தலைவராக இருக்கும் ஆச்சாரியார்களோ, பீடாதிபதிகளோ! மடாதிபதிகளோ! குருமார்களோ! சன்னிதானங்களோ!..... இந்துமதத்தின் தலைவர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். இப்படிக் கருதப் பட்டதால்தான் இந்துமதம் நலிந்து, மெலிந்து, தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடைந்தது. எனவே, ஆரியர்களோ, ஆரியமொழியோ இந்துமதத்துக்குத் தலைமை தாங்குவதும், வழிகாட்டுவதும் தடுக்கப் பட்டேயாக வேண்டும். இதனையே இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான சித்தர் காகபுசுண்டர் தமது முடிவான கருத்தாக அனைத்து இ.ம.இ. சார்புடைய அமைப்புக்களுக்கும், அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கிறேன்.

(சித்தர் காகபுசுண்டர், காக்காவழியன் பண்ணையாடி, ம.பழனிச்சாமி பிள்ளை)



(5) சித்தர் ஏளனம்பட்டியார் ".....ஆரியர்களின் வேதநெறிதான் துறவறத்தைக் கூறுகிறது. ஆனால், இல்லறத்தைத் துறப்பவன், மறப்பவன், மறுப்பவன் பெரிய பாவி. அவன் பூசை செய்யக் கூடாது. அவனைப் பார்ப்பதும், அவனோடு பழகுவதும் பாவம் என்று பதினெண் சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆரியத் துறவிகளை எப்படிப் புனிதர்களாக, புண்ணியவான்களாக, மதத் தலைவர்களாக, குருமார்களாக ஏற்க முடியும்' எனவே, ஆரியத் துறவிகள் இந்துமதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, ஆச்சாரியார்களாக, பீடாதிபதிகளாக, சன்னிதானங்களாகக் கருதப்படவே கூடாது! கூடாது!! கூடாது!!! கூடவே கூடாது!

  தமிழினத்து மடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆச்சாரியார்கள்.... ஆரியரைப் பார்த்தே துறவியாயினர். இது தவறு. திருந்த வேண்டும். இல்லறத்தார்தான் இந்துமதத்தில் குருமார்களாக, ஆச்சாரியார்களாக, தலைவர்களாக, வழிகாட்டிகளாக, அருளாளர்களாக, பீடாதிபதிகளாக, மடாதிபதிகளாக, சன்னிதானங்களாக.... இருக்க வேண்டும்! இருக்க முடியும். இதனைச் செயலாக்கினால்தான் இந்துமதம் வளமிகு வளர்ச்சியும், வலிவும் பொலிவும் பெற்றிடும்......" என்று எழுதிச் சென்றிருப்பதை இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் என்று யாமும் அப்படியே அறிவிக்கிறோம்.
 
(சித்தர் காகபுசுண்டர், காக்காவழியன் பண்ணையாடி, ம.பழனிச்சாமி பிள்ளை)

 
(6) சித்தர்களில் மண்ணை, பொன்னை, பெண்ணை மறுத்தும் வெறுத்தும் வாழ்பவர் உண்டு. இவர்கள் 'ஞானசித்தர்' எனப்படுவர். இவர்கள் ஆக்கப் பூர்வமாக எந்த ஒரு வகையான வழிபாட்டு நிலையத்தையும் உருவாக்க முடியாது. இவர்கள் தங்களுடைய பூசைகளுக்கு மற்றோர் குருக்கள், பூசாறி,.... தேடிட நேரிடும். இவர்கள் தத்துவ விளக்க நாயகர்களாக வாழ்ந்திடுவர். தங்களுடைய வாரிசுகளாக அருளுலகில் எவரையும் உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள்.

குறிப்பு:
(அ) பெண்ணை வெறுப்பதும், மறுப்பதும், இறைச்சியுணவை மறுப்பதும், வெறுப்பதும் ஒன்றே. எனவே, இவர்கள் பலியும், படையலும் இல்லாமலே பூசை செய்வர்.

(ஆ) இப்படிப் பட்டவர்கள் மோனத்தால் ஞானசித்தி பெற்றுத் தத்துவ வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள். ஆனால், பதினெண் சித்தர்கள் படைத்த இந்துமதத்துக்குத் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்பட இயலாது. இவர்கள், பதினெண் சித்தர்கள் படைத்த கருவறைகளுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள்.
 

(7) காயந்திரி மந்தரம் பலியோ, படையலோ இல்லாமல் கூட ஓதிப் பூசையினை முடிக்கும் சிறப்பினை உடையது. எனவே, இதனை ஞானசித்தர்கள் அன்றாடம் ஆறுகாலம் ஓதியே அனைத்துப் பூசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.

(8) காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.

குறிப்பு:
(அ) காயந்திரி மந்தரத்தைப் பதினெட்டாண்டுகளுக்குப் பிறகும் முறையாக ஓதும் போதுதான் மானுட வாழ்வு கடந்த மிகப் பெரிய சத்திகள் சித்தியாகின்றன.

(ஆ) பதினெட்டாண்டுகள் காயந்திரி மந்தரம் ஓதிய பிறகுதான்
 
காயந்திரி மாந்தரம்
காயந்திரி மாந்தரீகம்
காயந்திரி மந்திரம்
காயந்திரி மந்திறம்
 
எனும் நான்கைக் குருவழியாக முறையாக அவரவர் பக்குவத்துக்கும், தேவைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

(இ) பெரும்பாலும் 18 ஆண்டுகள் காயந்திரி மந்தரம் சொன்னவர்கள் அகம்பாவம், ஆணவம், பேராசை, சொந்தபந்தப் பாசம்.... முதலியவைகளை யெல்லாம் வென்று இல்லறத் துறவியாக 'அந்தணர்' ஆகிடுகின்றனர். எனவே, இவர்கள் குருக்களாக, ஆச்சாரியாராக, ஆதீனமாக, சன்னிதானமாக, மடாதிபதியாக, பீடாதிபதியாகச் செயல்படலாம். இவர்கள் தொடர்ந்து ஆண்பெண் இன்பம் துய்த்துத்தான் வாழவேண்டும் என்பதுதான் இந்துமதம்.

(9) காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.

கடவுள் - பொதுச்சொல். 48 வகை வழிபடு நிலையினரையும் குறிக்கும். அதனால், பதினெண் சித்தர்கள் காயந்திரி மந்தரம் ஓதிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பூசை செய்வது, வணங்குவது, கும்பிடுவது, வழிபடுவது.... மிகச் சிறந்த பயன்களைக் குறுகிய கால அளவில் விரைந்து தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

குறிப்பு:

(அ) குருவழி ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளை முழுமையாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்கப் பெற்றுச் சித்தி பெற்றவர்கள், எந்தப் பரிகாரத்தையும் குருவாணை பெற்றுப் பாதிப்புள்ளவர்களை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காயந்திரி மந்தரம் ஓதச் சொல்லி மேற்படிப் பூசைகளில் எதைச் செய்தாலும் முழுமையான நலம் விளையும்.

(ஆ) ஆரியர்கள் பெண்கள் மந்தரம் சொல்லுவதைத் தடுத்துள்ளார்கள். ஆனால், சித்தர்களின் இந்துமதம் பெண்களை எல்லாப் பூசைகளிலும் கலந்து கொள்ள அனுமதிப்பதால் அதைத் தடை செய்யவில்லை அவர்கள். இருப்பினும் விதவை, தீட்டு, மலடி.... என்று பெண்களில் ஒரு பகுதியினரைப் பூசைகளில் பங்கு பெறாமல் தடுக்கும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர் ஆரியர். இதுவே, இந்துமதத்துக்குக் கணிசமான அளவு நலிவுகளையும் சிக்கல்களையும் வழங்கியுள்ளது.

எனவே காயந்திரி மந்தரத்தை இனிவரும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளாவது தாராளமாக எல்லோரும் தெரிந்து, அறிந்து, பயின்று, பயன்படுத்தி, அநுபவித்துப் புரிந்து நன்மையடையும்படிச் செய்ய வேண்டும். அதுதான், இந்துமதத்தை மறுமலர்ச்சி பெறச்செய்யும்; பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதமே உலக மதங்களனைத்துக்கும் மூலமதம், தாய்மதம்,... என்ற பேருண்மையை உலகம் உணரச் செய்யும்; உலக மதங்களை ஒன்றிணைக்கும்; உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும். தனிமனிதர்களைப் பக்குவப்படுத்திக் குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு.... முதலிய அனைத்தையும் வளப்படுத்தி, வலிமைப்படுத்திப் பொலிவு பெறச் செய்யும் ஆற்றல் 'காயந்திரி மந்தரத்துக்கே' உண்டு.

என்னால் காயந்திரி மந்தரத்தை உலகுக்கு வழங்க முடிய வில்லையே என்று வருந்துகிறேன். இருந்தாலும் இ.ம.இ., அ.வி.தி., க.வ.க., அ.ஆ.க.,.... முதலிய பல அமைப்புக்களைக் காயந்திரி மந்தரம் பயிர் செய்யப்படப் போகும் நிலத்துக்கு வேலியாக அமைக்கிறேன். ஏனெனில், வேலியில்லாப் பயிராக இந்துமதம் இருந்ததால்தான் போலியானவற்றால் இந்துமதம் நலிந்தது, செயல் தடுமாறித் தோல்வி பெற்றிட நேரிட்டது......

இனியாவது தமிழர் உலகுக்கு இந்துமதத்தை அமுதமாக, காயகல்பமாக, கற்பகத் தருவாக வழங்கட்டும்.
 
(கண்டப்பக் கோட்டைச் சித்தர், ஏளனம்பட்டியார், உ. இராமசாமிப் பிள்ளை)


     யாம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி..... என்று அறுபத்துநான்கு நிலைகளையும் பாரம்பரிய உரிமையாகப் பெற்று இந்துமதம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் முறையாக நிறைவேற்றி முடித்த கால எல்லைக்குள்ளேயே அரசயோகம் செய்து முடித்தோம். உலக அருளாளர்களும், கருக்களும், குருக்களும், தருக்களும், திருக்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும்,.... பலபடப் புகழ்ந்து விதந்து பேசும் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற நிலையையும் சித்தி செய்தோம்.

     இவற்றின் பிறகும் யாம் இலைமறை காயாகவே இருந்து செயல்பட்டுக் 'குருகுலங்கள்', 'பத்திப் பாட்டைகள்', 'சத்திச் சாலைகள்', 'சித்திச் சோலைகள்', 'அருட்கோட்டங்கள்', 'தவச்சாலைகள்', 'வேள்விப் பள்ளிகள்', 'யாகசாலைகள்'.... அமைத்து அருளுலகப் பயிற்சி வழங்கி நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்படி உருவானவர்கள் மூலம் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணிகளைத் துவக்கினோம். "வாருங்கள் மானுடரே! உங்களைக் கடவுளாக்குகிறோம்!" என்று அழைப்புக் கொடுத்தே அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க ஆரம்பித்தோம்.

     கி.பி. 1772 இல் எம் தாய்வழித் தாத்தா கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ.யை (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) அரசுப்பதிவுக்குள்ளாக்கி நாடெங்கும் கிளைகளைத் தோற்றுவித்து இந்துமத வளவளர்ச்சிப் பணியை விரிவு படுத்தினோம். இதற்குத் துணையாக ஏளனம்பட்டியார் உருவாக்கிய க.வ.க. (கடவுளை வழிபடுவோர் கழகம்), அ.ஆ.க. (அருளுலக ஆர்வலர் கழகம்),.... முதலியவைகளையும் நாடெங்கும் உருவாக்கினோம். ஒளிவுமறைவோ! சாதிமத வரையறையோ! ஏழைபணக்காரர் என்ற வேறுபாடோ இல்லாமல் 'பிறணவம்', 'பிறாணாயாமம் (பிறணவ யாமம்)', 'அருட்சினை மந்திறம்', 'கட்டு மந்திரம்', 'யாக மந்திரம்', .... முதலியவைகளை வழங்கினோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, உலகுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கிட எமது சாதனைகளின் மூலம் பலருக்கு 'ஞானக்காட்சி', 'அருட்கணிப்பு', 'அருள்வாக்கு', 'பரிகாரம் செய்யும் அருளாற்றல்', 'தவசித்தி',...... முதலிய அருட்செல்வங்களை வழங்கி அருளாளர்களாகச் செயல்படச் செய்தோம். இத்திட்டத்தில் சில தனிமனிதர்களின் தவறுகளால் பழியும், இழப்பும், தேக்கமும், குறையும்.... வந்தன. இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் திருத்திச் செயல்பட்டோம்.

     இவற்றையெல்லாம் கணக்கிட்ட உலக அருளாளர்கள் 'இந்துமதத்தால்தான் உலக ஒற்றுமை, சமத்துவம், பொதுவுடமை, அமைதி,..... முதலியவை உருவாக்க முடியும்' என்ற பேருண்மையை உணர்ந்தனர். எனவே, எம்மை 'இந்துமதத் தந்தை, 'குருமகா சன்னிதானம்', 'ஞாலகுரு சித்தர் கருவூறார்' என்று பாரம்பரிய அருட்பட்டங்களின் சுருக்க அருட்பட்டங்களால் ஏற்றுப் போற்றினர். அத்துடன் உலகம் முழுவதுமுள்ள அருளாளர்கள் எமக்கு எல்லாவித உதவிகளையும், பாதுகாப்புக்களையும் அருளாட்சி முயற்சித் துணைகளையும் வழங்கலாயினர்.

     இவற்றால் துணிவு பெற்ற யாம், பருவகாலத்தே பயிர் செய்தல் வேண்டுமென உணர்ந்து அருட்பயிர் விளைவிக்கும் பணியில் முழுமையாக எம்மையும், எம்மைச் சார்ந்த பல நூறாயிரக்கணக்கான அருளாளர்களையும் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம். இப்பணியின் முதல் கட்டமாகக் காயந்திரி மந்தரத்தைப் பதினெண் சித்தர்கள் முதன்முதல் தமிழ்மொழியில் எப்படி வெளியிட்டனரோ! அப்படியே இப்போது வெளியிடுகிறோம். இதன் முன்னுரையாக இ.ம.இ.யின் முதல் தலைவரான கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும், இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான எம் தந்தை சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி, எமது முன்னோர்களின் வாசகங்களைத் தொகுத்து இந்தக் காயந்திரி மந்தர வெளியீட்டுக்கு முன்னுரை தயாரிப்பதையே எமது கடமையாகக் கருதுகிறோம்.

     தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண நிலம்தான் இந்து மதத் தத்துவ விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை. இப்பேருண்மையை உணர்ந்து தமிழர்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம் யாம். இந்துமதம் பயிராகும் நிலமே இந்தியா என்பதை இந்தியர்கள் உணரலே இந்திய ஒற்றுமையை உருவாக்கும்.

 
எம் கடன் பணி செய்து கிடப்பதே!
 
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!
அன்பே சிவம்!
 

அன்பு

இந்துமதத் தந்தை
குருமகா சன்னிதானம்
ஞாலகுரு சித்தர் கருவூறார்