மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 1)



மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 1)

(சித்தர் நெறி – சிவநெறி – இந்துமதம்.)

மூலப்பதினெண் சித்தர்கள்:

       “மூலப்பதினெண் சித்தர்கள்”, இம்மணுலக பயிரின, உயிரின வாழ்வியலுக்கான ஆட்சி, மீட்சிக்கென வழங்கிய சமூக சமய அறிவியல் விஞ்ஞானமே “இந்து மதம்” என்ற கட்டமைப்பு ஆகும்.

      “இந்து” என்ற சொல்லுக்கு ஒரு மானுடன் இலக்கணமாக திகழ “அன்பு, கனிவு, துணிவு, பற்று, பாசம், தோழமை, ஒற்றுமை, பணிவு, வீரம், ஆளுமை, ஒழுக்கம்”.. என்ற வகையில் வாழ்வதாகும்.

      “மதம்” என்றால் சீர்திருத்தம் என்று பொருள். முறைப்படுத்தப்பட்ட, நெறிப்படுத்தப்பட்ட, வேது (பக்குவ) ப்படுத்தப்பட்ட வாழ்வியல் வழிகாட்டல் நிறைந்த கட்டமைப்பே “இந்து மதம்” ஆகும்.

      மண்ணுலக (The Earth) (THE FLOURA AND THE FAUNA) உயிரின, மானுட, பயிரின வாழ்வியலை ஆட்சி செய்வதில் அதிக பங்கு வகிப்பது நாள்கள் (இராசிகள்), கோள்கள் (கிரகம்), விண்மீன்கள் (நட்சத்திரம்) ஆகும். இவைகளின் சுழற்சியால் ஏற்படும் நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப “சித்தர் அறிவியல்” துணைகொண்டு உருவாக்கப்பெற்றதே வான சாத்திற அடிப்படையில் ஆன பிறப்பியல் (ஜாதகம்) பாரிகார பூசைகள் ஆகும். மண்ணுலக கடவுள்கள் (The God of the earthly pleasures), விண்ணுலக கடவுள்கள் (The God of the heavenly pleasures) என்பார்களை கொண்டு பயிரின, உயிரினங்களுக்கு சாது அகமாக, சாதகமாக ஆக்கிக் கொள்ள “மூலப்பதினெண் சித்தர்கள்” வழி வகை செய்தார்கள்.

No comments:

Post a Comment