காயந்திரி மந்தரம் ≠ காயத்ரீ மகாமந்த்ரம்



      ‘காயம் + திரி + மந்திரம் = காயந்திரி மந்திரம்’ என்ற பேருண்மை தெரியாததால் தமிழர்கள், ஆரியர்களுக்குரிய வடமொழி ‘சமசுக்கிருதம்’ மந்திரமே ‘காயத்திரி மந்திரம்’ என்று தவறாகக் கருதுகிறார்கள். இது தவறு. 

      “மெய் உய்ய,  மெய்யும் உயிரும் வாய்மை பெற,  பத்தி சத்தி சித்தி முத்தி எனும் நான்கு நிலைகளைப் பெற்றிட,  அச்சம் இச்சை கூச்சம் மாச்சரியம் எனும் நான்கும் வாழ்வை நலிவடையாமல் காத்திடக் காயந்திரி மந்திரம் காலை மாலை இருவேளை கூறப்படல் வேண்டும்....” என்று குருபாரம்பரியம் மிகத் தெளிவாகக் காயத்திரி மந்திரம் பற்றிக் கூறுகிறது.

     பன்னெடுங் காலமாகச் சித்தர்களின் விந்துவழி வாரிசுகளன்றிப் பிறர் அறிய முடியாது இருந்த ‘கருவறை உயிர்ப்பு மந்திறம்’, ‘கட்டு மந்திறம்’, ‘ஐந்தீ வேட்டம் தோத்திறம்’ .... முதலியவைகளை யாம் இப்போது நம்மவர்களுக்கு வழங்கி வருகிறோம். இது புதுமை, புரட்சி, மறுமலர்ச்சி, வளர்ச்சி.... எனப் பாராட்டப் படுகிறது. 

     'காயத்ரீ மந்த்ரம்' என்று சமசுக்கிருதத்தில் கூறப்பட்டு வருவதைத் தவிர்த்து தமிழில் உள்ள இம்மந்தரத்தை அனைவரும் நாடு, மொழி, இன, மத.... வேறுபாடின்றி உடனடியாகப் பயன்படுத்தித் தங்களை அமைதியான, அறிவான, இளமையான, இனிமையான.... வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டு சிறக்கும்படி வேண்டுகிறோம். தமிழில் உள்ள மந்திறங்கள்தான் குறிப்பிட்ட ஒரு இனத்துக்கு உரியன என்றில்லாமல் அனைவரும் பயன்படுத்தக் கூடிய விதத்தில் பதினெண் சித்தர்கள் படைத்துள்ளனர்.

ஓம் பூர்வ புலன்கள் சுவையாகுக!
தத்துவ வித்துக்கள் அரணாகுக!
பாரின்கோ தேவர் வசிக்கும் தீ மகிழட்டும்!
தீயே யோகப் பரஞ்சோதி யாகும்!"


இதுவே காயந்திரி மந்தரம் (காயம் = உடல், திரி = திரியாமல், மாறாமல்) ஆகும்.
"அனைவரும் ஓதிப் பயனடையட்டும்"
"தனிமனிதச் செழுச்சியே இந்துமதம்"
"தனிமனித வழிபாட்டு ஈட்டமே கூட்டுவழிபாடு"
-குருபாரம்பரியம்
      சமசுக்கிருத வேதங்களால் நடக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, தவம், பூசை..... முதலிய அனைத்துமே கோடியில் ஒரு பங்கு கூட தமிழ் வேதங்களால் செய்யப்படுவனவற்றால் கிடைக்கும் பயன் போலத் தர முடியாதவை.  இதனால்தான், சித்தர்கள் கட்டிய 48 வகையான வழிபாட்டு நிலையங்களும் அருள்நலம் குன்றிப் பொலிவிழந்து விட்டன.  குறிப்பாகக் குடமுழுக்கு விழாக்கள், கருவறைப் புத்துயிர்ப்புக்கள், எழுந்தருளிப் புத்துயிர்ப்புக்கள், சக்கரப் பூசைகள், ஏந்தரப் பூசைகள்.... எல்லாம் சித்தர்களின் மரபுப்படி 'இலைக் குலுங்கா நடுச் சாமத்தில்' (நடுநிசியே உயிர்ப்புப் பூசைக்குரியது - குருவாக்கு),  'அனைத்தும் உறங்கும் நள்ளிரவில்'  'அருவ, அருவுருவ ஆட்சிக்குரிய நடு யாமத்தில்தான்' செய்ய்பப்பட வேண்டும்' என்ற சித்தர் நெறி, சட்டம், ஒழுங்கு, மரபு, பூசாவிதி, படி, கட்டளை, ஆணை, அருளுரை, அறிவுரை..... முதலியவைகளை மீறி ஆரியர்கள் செயல்பட்டே இந்துமதத்தின் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கையும் பகற்கனவாக, மாயமாக ஆக்கி விட்டார்கள். இதனால்தான் 'கடவுளைக் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை' என்று தவறான பழமொழி பிறந்தது. எல்லோருமே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர்,..... எனும் நாற்பத்தெட்டு வகையினரையும் காணலாம், யார் விரும்பினாலும் மேற்கூறிய 48 நிலைகளில் யாராகவும் மாறலாம்.... என்ற சித்தர் நெறியே மக்களுக்குத் தெரியாத ஒன்றாகிவிட்டது.

    காயத்ரீ மந்த்ரம் என்று ஒலியைக் குறிக்கும் பொருளற்ற சொற்களால் உருவான ஒரு பூசை மந்திரத்தை உருவாக்கி அதனை ஆரியர்கள் ஓதுவதன் மூலம் தமிழர்கள் தங்களிடமிருந்த காயந்திரி மந்தரம், மாந்தரம், மாந்தரீகம், மந்திரம், மந்திறம்.... என்பவைகள் ஆரியர்களிடமிருந்து வந்தவையென்றும், ஆரியர்கள் சமசுக்கிருதத்தில் ஓதுவதுபோல் ஓதினால்தான் பயனென்றும் கருதித் தங்களுடைய ஐந்தையும் விட்டு ஆரியருடைய காயத்ரீ மந்த்ரத்தையே ஓத ஆரம்பித்து நாளடைவில் அதனால் பயன் தெரியாமையால் அதனையும் ஓதாது விட்டு விட்டனர். இதுதான் சமசுக்கிருதத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் இந்துமதத்துக்கும் ஏற்பட்ட பேரழிவு, பெருங்கேடு. 

  • காயந்திரி மந்திரங்கள் தமிழர்களுடையவைதான். தமிழில்தான் முதன் முதல் பதினெண் சித்தர்களால் படைக்கப்பட்டன.
  • காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.
  • காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.
  • சூரியனை முழுமுதலாகக் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தொழுவதுதான் காயந்திரி மந்தரம்.
  • சாதாரண மானுட வாழ்வில் கடவுளின் அருளைத் தேவையான அளவு பெற்று நிம்மதியும், நிறைவும், அமைதியும், அன்பும் உடைய வாழ்வு வாழ்ந்திடக் காயந்திரி மந்தரம்தான் பேருதவி புரியும். அன்றாடம் 108 முறை ஓதினால் போதும். எல்லா நலங்களும், விழிச்சிகளும், எழுச்சிகளும், செழுச்சிகளும் ஏற்பட்டிடும்.
  •  
     ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தை ஒலி நயம் கெடாமல் அன்றாடம் நூற்றெட்டுத் (108) தடவை ஓதினால், பத்தி, சத்தி, சித்தி, முத்தி.... முதலியவற்றில் படிப்படியாகத் தேர்ச்சியடைவான். நாடு, மொழி, இனம், காலம்.... என்ற எல்லைகளைக் கடந்து இப்பூவுலகில் வாழும் எந்த மனிதன் வேண்டுமானாலும் தமிழில் உள்ள காயந்திரி மந்தரத்தைச் சொல்லி அருளுலகச் செல்வங்களை அடையலாம் (காயந்திரி மந்தரம் ஓர் உலக மந்தரம், மத வேறுபாடு இல்லாமல் ஓதலாம்).  ஏனெனில், இவ்வுலகில் உள்ள அனைத்து வழிபாட்டு நிலையங்களும், வழிபடு நிலையினரும், வழிபாட்டு வாசகங்களும்.... பதினெண் சித்தர்களால்தான் உருவாக்கப்பட்டவை.
     ஞானி, தவசி, கடமைவீரர், இளைஞர், அருளாளர்.... முதலியோர்கள் ஒரு நாளைக்கு ஆறுகாலம் காயந்திரி மந்தரத்தை ஓத வேண்டும். இது காயசித்தி, மாயாசத்தி, ஓயாசத்தி, சாயாசத்தி.... எனும் நாற்பத்தெட்டு வகைச் சித்திகளையும் வழங்கும்.

     ஒவ்வொரு தமிழரும் உடனடியாக அன்றாடம் பதினெண்சித்தர்கள் பகர்ந்துள்ளது போல் காயந்திரி மந்தரம் முறையாக ஓதி நிறைவான அருள்நிலைகளைப் பெற வேண்டும். அதுதான், தனி மனிதர்களைக் காக்கும். தமிழைக் காக்கும், இந்துமதத்தைக் காக்கும்.

     அனைத்து அருளாளர்களும், அருளுலக ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் காயந்திரி மந்தரம் ஓதி அருட்செல்வர்களாக உருவாவதுதான், இந்து மத மறுமலர்ச்சிப் பணியை வெற்றி பெறச் செய்யும்.
இந்துமதமே உலக மானுடரைக் காக்கும்.

காயந்திரி மந்தரம் பற்றிய சித்தர் காகபுசுண்டரின் விளக்கம் மற்றும் மறைமலையடிகளின் கருத்து



     சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளை அவர்கள் இவ்வுலக மாபெரும் மார்க்சீயச் சிந்தனையாளர்களுள் ஒருவர். ஆனால், இவர் கடவுள் மறுப்பாளராகவோ, வெறுப்பாளராகவோ, மத எதிர்ப்பாளராகவோ, நாத்திகராகவோ வாழவில்லை. இவரை இலெனின், மாவோ,... போன்றவர்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார் திரு எம்.என்.ராய்.

     திரு எம்.என்.ராயும் இவரும் (M.N. Roy and M.P. Pillai founded the International Communist Party and the Radical Democratic Party) உலகக் கம்யூனிச இயக்கம் அமைப்பையே தோற்றுவித்த மூலவர்கள். இவர்களே இந்தியாவுக்காகச் சிறப்பாகப் 'பகுத்தறிவுக் குடியரசுக் கட்சி' என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

   திரு எம்.என். ராயும், டாக்டர் ஐன்சுடீனும் (அணுக்கொள்கையைக் கண்டறிந்த செர்மானிய நாட்டு யூத இன விஞ்ஞானி) சேர்ந்து செர்மனியில் உருவாக்கிய 'உலக மத ஆய்வுக் குழு' (The World Religious Research Society - T.W.R.R.S.) எனும் அமைப்பின் தலைவராக இந்திய மண்ணில் வாழையடி வாழையென வரும் சித்தர்களின் வழி வந்த சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமிப் பிள்ளையே நியமிக்கப்பட்டார்.

   சித்தர் காகபுசுண்டருக்கு நேரடியாகச் சமசுக்கிருத மொழியில் மிகுந்த புலமையை வளர்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமுண்டு. ஆனால், மாக்சுமுல்லரின் (Maxmueller) ஆங்கில நூல்கள் மூலம் சமசுக்கிருத இலக்கிய உலகைப் புரிந்து; கி.பி. 1772 இல் இந்து மறுமலர்ச்சி இயக்கம் அமைத்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் (கண்டப்பக் கோட்டைக் கருவூறார்) உ. இராமசாமிப் பிள்ளை அவர்கள் சமசுக்கிருத மொழி பற்றிக் கூறிய கருத்துக்களை ஆராய்ந்தார்.

    இது பற்றி இவர், ".... நான் எதையும் சிந்தித்து ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் மார்க்சீயவாதி. மார்க்சீயம் எவரையும் நேர்மையான சிந்தனையாளராக்கும். சமசுக்கிருத மொழியை வெறுப்பதும், மறுப்பதும், எதிர்ப்பதும் தேவைதானா என்ற கருத்துப் போராட்டம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

     தமிழிலிருந்த காயந்திரி மந்தரம் என்பதை ஆரியர்கள் அழித்திடவே அதே போன்ற ஒலியையுடைய 'ஸ்ரீகாயத்ரீ மஹாமந்த்ரம்' ஒன்றைப் படைத்தார்கள். ஆனால், தமிழிலுள்ள காயந்திரி மாந்தரம், மாந்தரீகம், மந்திறம், மந்திரம் எனும் நான்கை ஆரியர் அறியமுடியாதபடி சித்தர்கள் காத்திட்டதால்தான் அவை பிழைத்தன என்ற கருத்தைத் தமிழ்ப் பெரியார் மறைமலையடிகளிடம் பலமுறை எடுத்துக் கூறி இது பற்றிய அவரின் கருத்தைக் கேட்டேன். அவர் கூறிய பதில் கண்டப்பக் கோட்டைக் கருவூறார் எனப்படும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளையின் கருத்தையே வலிமைப் படுத்தியது. எனவே, ஒரு மார்க்சீயவாதி என்ற முறையில் நான் மறைமலையடிகளாரின் கருத்தை அப்படியே குறித்து வைக்கிறேன்.

மறைமலை அடிகள்: 'காயத்ரீ ஜெபம் என்பது வெறும் ஏமாற்றே. அந்த மந்தரத்தைச் சொல்லிச் சத்தி பெற்றவர்களோ! சித்தி பெற்றவர்களோ! கிடையாது. நமது தேவார, திருவாசகப் பாடல்களுக்கு இருக்கிற சத்தியில் கோடியில் ஒரு பங்கு கூட இதற்கு இல்லை.

   சமசுக்கிருத பண்டிதர்கள் யாரும் இந்தக் காயத்ரீ மந்த்ரத்திலுள்ள சொற்களுக்கு எந்தக் குறிப்பிட்ட நிகண்டையோ (அகராதி Dictionary) குறிப்பிட்டுப் பொருள் சொல்லுவதில்லை. இந்த மந்தரப் பாடலும் இலக்கண நூலுக்கு ஒத்ததாக இல்லை. எனவே, இது தமிழிலிருந்த மந்தரத்தின் ஒலியை மட்டும் அப்படியே பின்பற்றி உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். சித்தர் ஏளனம்பட்டியார், 'பதினெண்சித்தர் பீடாதிபதிக்குத்தான் காயந்திரி மந்தரத்தை வெளியிட உரிமையுண்டு' என்று கூறிச் சென்று விட்டதால், தமிழில் உள்ள காயந்திரி மந்தரம் தெரிய முடியவில்லை. அதனால், சமசுக்கிருதக் காயத்ரீ மந்த்ரத்தைத் தமிழில் முதலில் தோன்றிய காயந்திரி மந்தரத்தோடு ஒப்பிட முடியவில்லை.

   இன்றைய சமசுக்கிருதப் பிரியர்கள் காயத்ரீக்குக் கூறும் பொருள் உண்மையானதல்ல. எந்த ஒரு சொல்லுக்கும் அவர்கள் கூறும் பொருள் உண்மையில் அச்சொல்லுக்குரியதல்ல; வலிந்து இவர்களாகக் கூறியதேயாகும்.

ய = எவர்
ந = நம்முடைய
திய = புத்தியை
ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ
தத் = அப்படிப்பட்ட = (பரப்ரஹ்மம்)
தேவஸ்ய = ப்ரகாசனான
ஸவிது = உலகை உண்டு பண்ணுபவருடைய, அதாவது சூரியன், சிவன், நாராயணன்... என்போருடைய
வரேண்யம் = மிக உயர்ந்ததான
பர்க = தேஜஸ்ஸை
தீமஹி = தியானம் செய்கிறோம்.

     அதாவது, அறிவை நல்ல விஷயத்தில் பிரேரணை செய்யப் பழக்குகிறோம் எனப்படும் இப்பொருள்களைக் காசிச் சமசுக்கிருதப் பண்டிதர்கள் கூட இலக்கிய இலக்கண ஆதாரம் காட்டி மெய்ப்பிக்கவில்லை... ' என்று **மறைமலை அடிகளார் கூறினார்."

(** இங்கே மறைமலை அடிகளாரின் தூய தனித் தமிழ் நடையில் பதில் இல்லை. அதாவது ம.பழனிச்சாமிப் பிள்ளை சித்தர் காகபுசுண்டர் தமது சொந்த நடையில் மறைமலை அடிகளாரின் கருத்தை எழுதியுள்ளார்.)


குறிப்பு: ஆரியர்களால் ஓதப்படும் காயத்ரீ மஹாமந்த்ரத்தில் உள்ள சில சொற்களுக்குப் பொருளில்லை என்று மறைமலை அடிகளே கூறியுள்ளார். அவையாவன:

1. பூர் 2. புவஸ் 3. தியோ 4. யோந 5. விதுர

காயந்திரி மந்தரம் முன்னுரை



     இந்துமதம் என்றால் என்ன? அது, எப்போது? எங்கு? எவரால்? ஏன் தோற்றுவிக்கப்பட்டது? அதன் குரு யார்? குருகுலம் எது? அதன் மூலக் கோயில் எது? மூது நூல் எது? முதன்மையான வழிபாடு என்ன? தத்துவம் என்ன? சித்தாந்தம் என்ன? அது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன? வாழ்க்கைப் பயன் என்ன? முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன? சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு....... முதலியவை பற்றிக் கூறுவதென்ன' என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர். மேற்கூறிய வினாக்களுக்குச் செயல் விளக்கமாக மந்திரங்கள், பூசாவிதிகள், சடங்குகள், நெறிகள், சம்பிறதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஒழுகலாறுகள்..... முதலியவைகளைத் தெளிவான, அழகான, எளிமையான, பயனுடைய இலக்கியங்களாகத் தரக்கூடிய மொழிதான் இந்துமதத்தின் மூலமொழி, தாய்மொழி, முதல்மொழி, பூசைமொழி, அருளாட்சி மொழி, மதப்பயிற்சி மொழி, தேவமொழி.... எனும் தகுதியைப் பெற்றிடும்.

     இந்த வரையறுக்கப்பட்ட கருத்தின்படிதான் (definition) இந்துமத வரலாறும், விளக்கமும் வழங்கப்படல், விளக்கப்படல் நிகழ வேண்டும். அப்பொழுதுதான், இந்து மதத்துக்குள் உள்பூசல், போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சண்டை, சச்சரவு, சுரண்டல், ஏமாற்று, தவறான வழிநடத்தல், மடமை, அறியாமை, புரியாமை, மதவிரோதம், மதத்துரோகம், மதமறுப்பு, மதவெறுப்பு, (மதக் காட்டிக் கொடுப்பு) முதலியவைகளை முழுமையாக வெல்ல முடியும்.

     இப்படிச் சிந்திப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்க வளவளர்ச்சிச் சிந்தனையாக இருக்க முடியும்.

     தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகவாதத்தைத் துவக்கி வளர்த்தபோதும்! அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவே இல்லை! அவர், பார்ப்பன மறுப்பு! வெறுப்பு! எதிர்ப்பு! என்ற கருத்தில்தான் இந்துமதத் தலைவர்களாகப் பார்ப்பனர் இருப்பதையும், பார்ப்பனர் மொழியான சமசுக்கிருதம் இந்துமத ஆட்சிமொழியாக இருப்பதையும் கண்டித்தார்! பழித்தார்! அவரே, தமிழ்மொழி இந்துமத ஆட்சிமொழியாவதையும், தமிழர் குருக்களாவதையும், அனைவரும் கோயில் 'கருவறைக்குள்' சென்று வழிபாடு செய்வதையும் ஆதரித்தார்! வரவேற்றார்! வலியுறுத்திப் போராடினார்.

     எனவே, 'பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் சிங்கம், தமிழினத்தந்தை, பெரியார் ஈ.வெ.ரா. இந்துமதத்தைச் சீர்திருத்தும் ஒரு மாபெரும் வீரச் சீர்திருத்தக் காரராகத்தான் வாழ்ந்தார்.....' என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணியை எழுச்சியும், செழுச்சியும், உயர்ச்சியும் உடையதாக்கிடும்.

திட்டங்கள்:(1) இந்துமதம், பார்ப்பனர் என்று கூறப்படும் வட ஆரியரின் வருகைக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் பதினெண் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

(2) இந்துமதத்துக்குப் பதினெண் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தார்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும்..... பிற அருட் சித்தியாளர்களும் உருவாக்கிச் சென்றுள்ள விந்துவழி வாரிசுகளும், கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளுமே குருமார்கள், தலைவர்கள், அருட்தளபதிகள். எனவே பார்ப்பனர் யாரும் இந்துமதத்தின் குருவாகவோ! தலைவராகவோ! தளபதியாகவோ!...... இருக்கவே முடியாது! முடியாது!! முடியாது!!! முடியவே முடியாது!

(3) பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி! அருள்மொழி! பூசைமொழி! பத்திமொழி! சத்திமொழி! சித்திமொழி! முத்திமொழி!.... எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.

குறிப்பு: சித்தர்களின் சாபத்தால் செத்துப் போன ஒரு மொழியே சமசுக்கிருத மொழி. இந்த உயிரற்ற மொழியில் கூறப்படும் மந்திரம், சாத்திறம், தோத்திறம், ஆகமம், உபநிடதம், வேதம்..... முதலிய அனைத்துமே பயனற்றவை, பிணத்துக்குச் சமமானவையே.

(4) ஆரியர்களின் வேதமதத்துக்குத் தலைவராக இருக்கும் ஆச்சாரியார்களோ, பீடாதிபதிகளோ! மடாதிபதிகளோ! குருமார்களோ! சன்னிதானங்களோ!..... இந்துமதத்தின் தலைவர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். இப்படிக் கருதப் பட்டதால்தான் இந்துமதம் நலிந்து, மெலிந்து, தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடைந்தது. எனவே, ஆரியர்களோ, ஆரியமொழியோ இந்துமதத்துக்குத் தலைமை தாங்குவதும், வழிகாட்டுவதும் தடுக்கப் பட்டேயாக வேண்டும். இதனையே இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான சித்தர் காகபுசுண்டர் தமது முடிவான கருத்தாக அனைத்து இ.ம.இ. சார்புடைய அமைப்புக்களுக்கும், அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கிறேன்.

(சித்தர் காகபுசுண்டர், காக்காவழியன் பண்ணையாடி, ம.பழனிச்சாமி பிள்ளை)



(5) சித்தர் ஏளனம்பட்டியார் ".....ஆரியர்களின் வேதநெறிதான் துறவறத்தைக் கூறுகிறது. ஆனால், இல்லறத்தைத் துறப்பவன், மறப்பவன், மறுப்பவன் பெரிய பாவி. அவன் பூசை செய்யக் கூடாது. அவனைப் பார்ப்பதும், அவனோடு பழகுவதும் பாவம் என்று பதினெண் சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆரியத் துறவிகளை எப்படிப் புனிதர்களாக, புண்ணியவான்களாக, மதத் தலைவர்களாக, குருமார்களாக ஏற்க முடியும்' எனவே, ஆரியத் துறவிகள் இந்துமதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, ஆச்சாரியார்களாக, பீடாதிபதிகளாக, சன்னிதானங்களாகக் கருதப்படவே கூடாது! கூடாது!! கூடாது!!! கூடவே கூடாது!

  தமிழினத்து மடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆச்சாரியார்கள்.... ஆரியரைப் பார்த்தே துறவியாயினர். இது தவறு. திருந்த வேண்டும். இல்லறத்தார்தான் இந்துமதத்தில் குருமார்களாக, ஆச்சாரியார்களாக, தலைவர்களாக, வழிகாட்டிகளாக, அருளாளர்களாக, பீடாதிபதிகளாக, மடாதிபதிகளாக, சன்னிதானங்களாக.... இருக்க வேண்டும்! இருக்க முடியும். இதனைச் செயலாக்கினால்தான் இந்துமதம் வளமிகு வளர்ச்சியும், வலிவும் பொலிவும் பெற்றிடும்......" என்று எழுதிச் சென்றிருப்பதை இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் என்று யாமும் அப்படியே அறிவிக்கிறோம்.
 
(சித்தர் காகபுசுண்டர், காக்காவழியன் பண்ணையாடி, ம.பழனிச்சாமி பிள்ளை)

 
(6) சித்தர்களில் மண்ணை, பொன்னை, பெண்ணை மறுத்தும் வெறுத்தும் வாழ்பவர் உண்டு. இவர்கள் 'ஞானசித்தர்' எனப்படுவர். இவர்கள் ஆக்கப் பூர்வமாக எந்த ஒரு வகையான வழிபாட்டு நிலையத்தையும் உருவாக்க முடியாது. இவர்கள் தங்களுடைய பூசைகளுக்கு மற்றோர் குருக்கள், பூசாறி,.... தேடிட நேரிடும். இவர்கள் தத்துவ விளக்க நாயகர்களாக வாழ்ந்திடுவர். தங்களுடைய வாரிசுகளாக அருளுலகில் எவரையும் உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள்.

குறிப்பு:
(அ) பெண்ணை வெறுப்பதும், மறுப்பதும், இறைச்சியுணவை மறுப்பதும், வெறுப்பதும் ஒன்றே. எனவே, இவர்கள் பலியும், படையலும் இல்லாமலே பூசை செய்வர்.

(ஆ) இப்படிப் பட்டவர்கள் மோனத்தால் ஞானசித்தி பெற்றுத் தத்துவ வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள். ஆனால், பதினெண் சித்தர்கள் படைத்த இந்துமதத்துக்குத் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்பட இயலாது. இவர்கள், பதினெண் சித்தர்கள் படைத்த கருவறைகளுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள்.
 

(7) காயந்திரி மந்தரம் பலியோ, படையலோ இல்லாமல் கூட ஓதிப் பூசையினை முடிக்கும் சிறப்பினை உடையது. எனவே, இதனை ஞானசித்தர்கள் அன்றாடம் ஆறுகாலம் ஓதியே அனைத்துப் பூசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.

(8) காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.

குறிப்பு:
(அ) காயந்திரி மந்தரத்தைப் பதினெட்டாண்டுகளுக்குப் பிறகும் முறையாக ஓதும் போதுதான் மானுட வாழ்வு கடந்த மிகப் பெரிய சத்திகள் சித்தியாகின்றன.

(ஆ) பதினெட்டாண்டுகள் காயந்திரி மந்தரம் ஓதிய பிறகுதான்
 
காயந்திரி மாந்தரம்
காயந்திரி மாந்தரீகம்
காயந்திரி மந்திரம்
காயந்திரி மந்திறம்
 
எனும் நான்கைக் குருவழியாக முறையாக அவரவர் பக்குவத்துக்கும், தேவைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

(இ) பெரும்பாலும் 18 ஆண்டுகள் காயந்திரி மந்தரம் சொன்னவர்கள் அகம்பாவம், ஆணவம், பேராசை, சொந்தபந்தப் பாசம்.... முதலியவைகளை யெல்லாம் வென்று இல்லறத் துறவியாக 'அந்தணர்' ஆகிடுகின்றனர். எனவே, இவர்கள் குருக்களாக, ஆச்சாரியாராக, ஆதீனமாக, சன்னிதானமாக, மடாதிபதியாக, பீடாதிபதியாகச் செயல்படலாம். இவர்கள் தொடர்ந்து ஆண்பெண் இன்பம் துய்த்துத்தான் வாழவேண்டும் என்பதுதான் இந்துமதம்.

(9) காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள்.

கடவுள் - பொதுச்சொல். 48 வகை வழிபடு நிலையினரையும் குறிக்கும். அதனால், பதினெண் சித்தர்கள் காயந்திரி மந்தரம் ஓதிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பூசை செய்வது, வணங்குவது, கும்பிடுவது, வழிபடுவது.... மிகச் சிறந்த பயன்களைக் குறுகிய கால அளவில் விரைந்து தரும் என்று வலியுறுத்துகின்றனர்.

குறிப்பு:

(அ) குருவழி ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளை முழுமையாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்கப் பெற்றுச் சித்தி பெற்றவர்கள், எந்தப் பரிகாரத்தையும் குருவாணை பெற்றுப் பாதிப்புள்ளவர்களை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காயந்திரி மந்தரம் ஓதச் சொல்லி மேற்படிப் பூசைகளில் எதைச் செய்தாலும் முழுமையான நலம் விளையும்.

(ஆ) ஆரியர்கள் பெண்கள் மந்தரம் சொல்லுவதைத் தடுத்துள்ளார்கள். ஆனால், சித்தர்களின் இந்துமதம் பெண்களை எல்லாப் பூசைகளிலும் கலந்து கொள்ள அனுமதிப்பதால் அதைத் தடை செய்யவில்லை அவர்கள். இருப்பினும் விதவை, தீட்டு, மலடி.... என்று பெண்களில் ஒரு பகுதியினரைப் பூசைகளில் பங்கு பெறாமல் தடுக்கும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர் ஆரியர். இதுவே, இந்துமதத்துக்குக் கணிசமான அளவு நலிவுகளையும் சிக்கல்களையும் வழங்கியுள்ளது.

எனவே காயந்திரி மந்தரத்தை இனிவரும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளாவது தாராளமாக எல்லோரும் தெரிந்து, அறிந்து, பயின்று, பயன்படுத்தி, அநுபவித்துப் புரிந்து நன்மையடையும்படிச் செய்ய வேண்டும். அதுதான், இந்துமதத்தை மறுமலர்ச்சி பெறச்செய்யும்; பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதமே உலக மதங்களனைத்துக்கும் மூலமதம், தாய்மதம்,... என்ற பேருண்மையை உலகம் உணரச் செய்யும்; உலக மதங்களை ஒன்றிணைக்கும்; உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும். தனிமனிதர்களைப் பக்குவப்படுத்திக் குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு.... முதலிய அனைத்தையும் வளப்படுத்தி, வலிமைப்படுத்திப் பொலிவு பெறச் செய்யும் ஆற்றல் 'காயந்திரி மந்தரத்துக்கே' உண்டு.

என்னால் காயந்திரி மந்தரத்தை உலகுக்கு வழங்க முடிய வில்லையே என்று வருந்துகிறேன். இருந்தாலும் இ.ம.இ., அ.வி.தி., க.வ.க., அ.ஆ.க.,.... முதலிய பல அமைப்புக்களைக் காயந்திரி மந்தரம் பயிர் செய்யப்படப் போகும் நிலத்துக்கு வேலியாக அமைக்கிறேன். ஏனெனில், வேலியில்லாப் பயிராக இந்துமதம் இருந்ததால்தான் போலியானவற்றால் இந்துமதம் நலிந்தது, செயல் தடுமாறித் தோல்வி பெற்றிட நேரிட்டது......

இனியாவது தமிழர் உலகுக்கு இந்துமதத்தை அமுதமாக, காயகல்பமாக, கற்பகத் தருவாக வழங்கட்டும்.
 
(கண்டப்பக் கோட்டைச் சித்தர், ஏளனம்பட்டியார், உ. இராமசாமிப் பிள்ளை)


     யாம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி..... என்று அறுபத்துநான்கு நிலைகளையும் பாரம்பரிய உரிமையாகப் பெற்று இந்துமதம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் முறையாக நிறைவேற்றி முடித்த கால எல்லைக்குள்ளேயே அரசயோகம் செய்து முடித்தோம். உலக அருளாளர்களும், கருக்களும், குருக்களும், தருக்களும், திருக்களும், தாத்தாக்களும், ஆத்தாக்களும்,.... பலபடப் புகழ்ந்து விதந்து பேசும் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற நிலையையும் சித்தி செய்தோம்.

     இவற்றின் பிறகும் யாம் இலைமறை காயாகவே இருந்து செயல்பட்டுக் 'குருகுலங்கள்', 'பத்திப் பாட்டைகள்', 'சத்திச் சாலைகள்', 'சித்திச் சோலைகள்', 'அருட்கோட்டங்கள்', 'தவச்சாலைகள்', 'வேள்விப் பள்ளிகள்', 'யாகசாலைகள்'.... அமைத்து அருளுலகப் பயிற்சி வழங்கி நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்படி உருவானவர்கள் மூலம் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணிகளைத் துவக்கினோம். "வாருங்கள் மானுடரே! உங்களைக் கடவுளாக்குகிறோம்!" என்று அழைப்புக் கொடுத்தே அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க ஆரம்பித்தோம்.

     கி.பி. 1772 இல் எம் தாய்வழித் தாத்தா கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ.யை (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) அரசுப்பதிவுக்குள்ளாக்கி நாடெங்கும் கிளைகளைத் தோற்றுவித்து இந்துமத வளவளர்ச்சிப் பணியை விரிவு படுத்தினோம். இதற்குத் துணையாக ஏளனம்பட்டியார் உருவாக்கிய க.வ.க. (கடவுளை வழிபடுவோர் கழகம்), அ.ஆ.க. (அருளுலக ஆர்வலர் கழகம்),.... முதலியவைகளையும் நாடெங்கும் உருவாக்கினோம். ஒளிவுமறைவோ! சாதிமத வரையறையோ! ஏழைபணக்காரர் என்ற வேறுபாடோ இல்லாமல் 'பிறணவம்', 'பிறாணாயாமம் (பிறணவ யாமம்)', 'அருட்சினை மந்திறம்', 'கட்டு மந்திரம்', 'யாக மந்திரம்', .... முதலியவைகளை வழங்கினோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, உலகுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கிட எமது சாதனைகளின் மூலம் பலருக்கு 'ஞானக்காட்சி', 'அருட்கணிப்பு', 'அருள்வாக்கு', 'பரிகாரம் செய்யும் அருளாற்றல்', 'தவசித்தி',...... முதலிய அருட்செல்வங்களை வழங்கி அருளாளர்களாகச் செயல்படச் செய்தோம். இத்திட்டத்தில் சில தனிமனிதர்களின் தவறுகளால் பழியும், இழப்பும், தேக்கமும், குறையும்.... வந்தன. இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் திருத்திச் செயல்பட்டோம்.

     இவற்றையெல்லாம் கணக்கிட்ட உலக அருளாளர்கள் 'இந்துமதத்தால்தான் உலக ஒற்றுமை, சமத்துவம், பொதுவுடமை, அமைதி,..... முதலியவை உருவாக்க முடியும்' என்ற பேருண்மையை உணர்ந்தனர். எனவே, எம்மை 'இந்துமதத் தந்தை, 'குருமகா சன்னிதானம்', 'ஞாலகுரு சித்தர் கருவூறார்' என்று பாரம்பரிய அருட்பட்டங்களின் சுருக்க அருட்பட்டங்களால் ஏற்றுப் போற்றினர். அத்துடன் உலகம் முழுவதுமுள்ள அருளாளர்கள் எமக்கு எல்லாவித உதவிகளையும், பாதுகாப்புக்களையும் அருளாட்சி முயற்சித் துணைகளையும் வழங்கலாயினர்.

     இவற்றால் துணிவு பெற்ற யாம், பருவகாலத்தே பயிர் செய்தல் வேண்டுமென உணர்ந்து அருட்பயிர் விளைவிக்கும் பணியில் முழுமையாக எம்மையும், எம்மைச் சார்ந்த பல நூறாயிரக்கணக்கான அருளாளர்களையும் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம். இப்பணியின் முதல் கட்டமாகக் காயந்திரி மந்தரத்தைப் பதினெண் சித்தர்கள் முதன்முதல் தமிழ்மொழியில் எப்படி வெளியிட்டனரோ! அப்படியே இப்போது வெளியிடுகிறோம். இதன் முன்னுரையாக இ.ம.இ.யின் முதல் தலைவரான கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும், இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான எம் தந்தை சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி, எமது முன்னோர்களின் வாசகங்களைத் தொகுத்து இந்தக் காயந்திரி மந்தர வெளியீட்டுக்கு முன்னுரை தயாரிப்பதையே எமது கடமையாகக் கருதுகிறோம்.

     தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண நிலம்தான் இந்து மதத் தத்துவ விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை. இப்பேருண்மையை உணர்ந்து தமிழர்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம் யாம். இந்துமதம் பயிராகும் நிலமே இந்தியா என்பதை இந்தியர்கள் உணரலே இந்திய ஒற்றுமையை உருவாக்கும்.

 
எம் கடன் பணி செய்து கிடப்பதே!
 
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!
அன்பே சிவம்!
 

அன்பு

இந்துமதத் தந்தை
குருமகா சன்னிதானம்
ஞாலகுரு சித்தர் கருவூறார்
 

‘குரு’ என்ற சொல் தமிழ்ச் சொல்லா?



மோசமான மோசடியான, இந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்
 

‘குரு’ - தமிழ்ச் சொல்லே. இதற்கும் ‘சமசுக்கிருதத்தி’ற்கும் தொடர்பே இல்லை. இதற்கான வேர்ச்சொல் (Root Word) தமிழில் இருக்கிறது.
 
      குரு = முளைப்பதற்குரிய முழுமையான கரு
    
      குருத்து; குருத்தோலை = கருவோலை (இளம் ஓலை, ஆரம்ப ஓலை)
   
   குருவி = மிகச் சிறிய ஆரம்பமான பறவையினம். இதுதான் முதலில் தோன்றிய பறவை யினம். இது அனைத்து பறவைகளுக்கும் பொதுப் பெயராக உள்ளது.
   
      குருந்தம் = அமைதியான, நிறைவான, முழுமையான பனிக்கட்டிப் போன்ற குளிர்ச்சியான, பரந்து எல்லையற்ற, விரிந்த, அனைத்துக்கும் மூலமான, முதலாக, ஒலியையுடைய எந்நேரமும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்ற தலைவனான இறைவன்.
   
      குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம்.
 குருந்த மர நிழலில் குருமார்கள் கல்வி போதிக்கும் மரபுடையது பண்டைத் தமிழினம்.
   
     குருதி = உடலில் ஓடுகின்ற செந்நீர் - இதுவே உயிர், இதுவே அனைத்துக்கும் ஆரம்பம், அடிப்படை, முதல்.
 

பன்னிரு திருமுறை தோன்றிய வரலாறு +



1.தனி மனிதர்கள் அருள்நீர் நிறைந்த கார்மேகங்களாக அருள்மழை பொழிதல் வேண்டும். அப்பொழுதுதான் அருள்நீர் எங்கும் ஊற்றெடுத்து தாகங்களையும், பசிகளையும் தணிக்க வகை செய்யும் - என்று குருபாரம்பரிய வாசகத்தையே உங்களுக்கு அருளார்ந்த அறிவுரையாக வழங்குகிறோம்.

2.“....
மானுடர்களில் தேவர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள் பிறப்பெடுத்துத் தொண்டாற்றுவது பதினெண் சித்தர்களின் அருட்பணித் திட்டமே. பதினெண் சித்தர்களின் நேரடி விந்து வழி வாரிசுகளால்தான் அறிவுரை’, ‘அருளுரை’, ‘அறிவார்ந்த அருளுரை’, ‘அருளார்ந்த அறிவுரைவழங்க முடியும்! முடியும்!! முடியும்!!! இவற்றின் பயனாகத்தான் இந்திய மண்ணில் அருளாளர்கள் வாழையடி வாழையாகத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழினம் அருளாளர்களின் தாய்’; ‘தமிழ்மொழி அருளாளர்களின் விழி, உயிர், செயல், சிந்தனை...’; ‘தமிழகம் ஒரு கடவுளர் நாடு’.... எனவேதான், தமிழர்களில் நாயன்மார்களும், ஆழ்வார்களும், மெளனிகளும், ஞானிகளும், தவசிகளும், மறையோர்களும், முறையோர்களும், நெறியோர்களும், வேதியர்களும், தவமுனிகளும், இருடிகளும், சித்தியர்களும்.... தோன்றிக் கொண்டே இருந்துங் கூட மக்களிடையே புதிய அருளாசையை, அளப்பரிய அருளார்வத்தை உருவாக்கவே முடியவில்லை. எந்த அற்புதமும், வியப்பும், மாயமும், மந்திர தந்திர எந்திரச் செயலும்.... தமிழர்க்கு வியப்பாக இருந்ததில்லை. இப்படிப் பட்ட தமிழர்களை ஒன்று திரட்டி ஒற்றுமைப் படுத்தினால்தான் உலக அருளாட்சி அமைக்க முடியும்! முடியும்!! முடியும்!!!’.... என்ற குருபாரம்பரிய வாசகத்தை மட்டுமாவது அச்சிட்டுப் பலருக்கும் வழங்குங்கள்.

3.“......
உலகில் தமிழகத்தைத் தவிர அருளாளர்கள் தோன்றுவதரிது. அதிலும் இந்தியாவைக் கடந்து தோன்றிட்ட அருளாளர்கள் மிகச் சிலரே. அதனால்தான், மகப்பேறு இல்லாப் பல குடும்பங்களிடையே பிறந்த ஒரு மகவு சீராட்டி, பாராட்டி வளர்ப்பது போல கன்பூசியசும், சொராசிட்டரும், ஈசாவும்(இயேசு), முகம்மது நபியும்.... அவர்களது காலத்திலேயே விரிந்த செல்வாக்கைப் பெற்றனர். அவர்களுக்குப் பிறகு விரிந்த வளர்ச்சி உருவாகி உலகம் முழுதும் பரவிற்று. ஆனால், தமிழக இனம் பிறந்த குமரிக் கண்டத்துக்கு அருள் மழையாக விண்வெளி அண்டங்களிலிருந்து பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும் வந்து தங்கி அமிழ்தான தமிழில் அருள் மழையை வழங்கினர். அன்று முதல் என்றென்றும் பத்தியாளர்கள், சத்தியாளர்கள், முத்தியாளர்கள், சித்தியாளர்கள் காடு போல் தழைத்து வருகின்றனர் தமிழினத்தில். அதனால், தமிழர்கள் அருளாளர்களைப் போற்றிப் பேணிப் பயன்படுத்தி தாங்களும் உய்வடைந்து பிறரையும் உய்வடையச் செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்யாமல் உறங்கும் உணர்வைப் பெற்றனர். எனவேதான், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும் .... தொடர்ந்து பழமையான வழிபாட்டு நிலையங்களைப் போற்றிப் பாதுகாப்பதோடு புதிய புதிய வழிபாட்டு நிலையங்களைத் தோற்றுவித்துக் கொண்டே வருகிறார்கள். இருந்தும் தமிழர்களின் அருளுலக வாழ்வு அடிக்கடி இருள் நிறைந்ததாகி விடுகின்றது. இதனைத் தடுத்து தமிழர்களின் அருளுலக வாழ்வு ஒளி நிறைந்ததாகச் செய்யவே,

குருபாரம்பரியம், குருவாக்கு, குருவாசகம்,

திருவாக்கு, திருவாசகம்,

கருவாக்கு, கருவாசகம்,

அருள்வாக்கு, அருள்வாசகம்,

மருள்வாக்கு, மருள்வாசகம்,

எள்ளல் மாலை,ஏசல் மாலை,

வணக்க மாலை, கும்பிடு மாலை, வழிபாட்டு மாலை, தொழுகை மாலை,

அழுகை மாலை, அரற்றல் மாலை, புலம்பல் மாலை,

கோள்மாலைகள் (ஞாயிறு மாலை, திங்கள் மாலை, புதன் மாலை, வியாழன் மாலை, வெள்ளி மாலை, சனிமாலை, இராகு மாலை, கேது மாலை)

சூத்திரம், சூத்திறம், சூத்தரம்,

சாத்திரம், சாத்திறம், சாத்தரம்,

தோத்திரம், தோத்திறம், தோத்தரம்,

மந்திரம், மந்திறம், மந்தரம்,

எந்திரம், எந்திறம், எந்தரம் [ஏந்தரம் பாடவேறுபாடு அல்லது தனிக்கலை உண்டு],

தந்திரம், தந்திறம், தந்தரம்,

மாந்தரம், மாந்தரீகம்,

தாந்தரம், தாந்தரீகம்,

ஏந்தரம், ஏந்தரீகம்,

நிடதம், இணை நிடதம், துணை நிடதம்,

நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம்,

மறை, மறையாந்தம்,

முறை, முறையாந்தம்,

நெறி, நெறியாந்தம்,

வேதம், வேதாந்தம்,

சித்தம், சித்தாந்தம்,

நாதம், நாதாந்தம்,

போதம், போதாந்தம்,

ஆகமம், மீமாம்சை...

முதலியவைகளை மானுட இனத்துக்குப் பதினெண் சித்தர்கள் தங்களது மொழியான அன்புத் தமிழில் வழங்கினார்கள். இப் பேருண்மையினைத் தெரிய, அறிய, தெளிய, புரிய, உணர, நம்பத் தமிழர்களைப் பக்குவப் படுத்தவே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றுகிறார்கள்.... - குருபாரம்பரிய வாசகம்.

4.“.... பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் தமது 200 ஆண்டுகளின் முயற்சிகளின் அயர்ச்சியால் நிலையான அருளுலகக் காப்புக்காகத் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினார். இவ் வழிபாட்டு நிலையம் அருளுலகச் செழிப்பை வளர்க்க முடியாது போனால், தொடர்ந்து அருளுலகச் செழிப்பை விழிப்பாகக் காத்திட ஏட்டுலகில் நிலையான கோயில் ஒன்றைக் கட்டினார்.
இக்கோயில் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் தேடிச் சென்று கொணர்ந்து பதினெட்டு ஆண்டு வளர்த்த தேவகுமாரன் ஈசாவும், முகம்மது நபியும் பன்னிரண்டு அடியான்களை உருவாக்கியது போல் இவர் பன்னிரண்டு நூல் தொகுதிகளைபன்னிரு திருமுறைகள்உருவாக்கும் பணியினைத் துவக்கினார்... [துவக்கினார்என்பதால் இவர், பன்னிரண்டு நூல்களையும் முழுமையாகப் பட்டியலிட்டார் என்று கருதவே முடியாது] இவரது மகன் கருவூர்த் தேவரே இப் பன்னிரண்டு நூல்களையும் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் தொகுத்துஅருளுலக அரங்கேற்றம்செய்தார். இவர் தம் மகனான திருமாளிகைத் தேவரின் [காவிரியாற்றங் கரைக் கருவூறாரின் பேரனே திருமாளிகைத் தேவர்] பாடல்களையும் இந்தப்பன்னிரு திருமுறைதொகுப்பு நூலில் சேர்த்தார். இவரே, “பன்னிரண்டு என்ற எண்ணிக்கை முருகனின் கண்களை நினைவு படுத்துகின்றன...” எனச் சில இடங்களில் எழுதுகிறார்.
இவரே “... பன்னிரண்டு மனிதர்களை அடியான்களாக உருவாக்கிய அருளாளர்கள் வெற்றி பெற்றது போல் தமிழர்களுக்கிடையில் வெற்றி பெற முடியாது என்பதை நாயன்மார்கள், ஆழ்வார்கள், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்கள்... உருவாக்கிய ஆயிரக் கணக்கான அடியார்கள் அணைந்த யாக விறகுகளாகி விட்டதை அறிந்தார். அதனால்தான் மனிதர்களை அருளுலக இருளகற்றும் அணையாச் சுடர்களாக ஆக்கத் திட்டமிட்டார்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தொகுக்கப் பட்டவுடன் அவரை அழைத்து வந்து மரியாதைகள் செய்து; அவர் விரும்பிய ஐம்பொன் சிலைகளை வார்த்து வழங்கி; அவரின் தொகுப்பைத் தமது பன்னிரு திருமுறை நூல் பட்டியலில் முதல் நூலாக ஏற்றார். ஆனால், பிற்காலத்தில் திருமால் வழிபாடு வைணவம் என்று தனிச் சமயமாக வளர்ந்து சிவநெறிக்குப் பகையானதாகவும், மறுப்பானதாகவும், எதிர்ப்பானதாகவும், வேறானதாகவும்.... செயல்பட்டிட்டது. இப் பகையைச் சிவநெறிச் செல்வர்களான சோழர்கள் எப்பாடுபட்டும் நெறிப் படுத்தவே முடியவில்லை

அதனால் முதல் நூலான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விடுத்தேபன்னிரு திருமுறைப் பட்டியல்தயாரிக்க வேண்டியதாயிற்று. அதற்குச் சேக்கிழார் பெருமானின்திருத்தொண்டர் புராணம்உதவி செய்து பெருமை பெற்றது. அதனால், ‘பெரிய புராணம்’ (பெருமைக்குரிய புராணம்) என்றாயிற்று. குருபாரம்பரியத்தின் நிறைவு பன்னிரு திருமுறைப் பட்டியலாகிறது.... இனிக் குருபாரம்பரியம் எழுதுபவர் யார்' தமிழ்க் கருவான குருபாரம்பரியம் காப்பவர் யார்' கடல் கடந்த நாடுவாழ் கன்னித் தமிழரே குருபாரம்பரியம் காத்தற்குரியர்.... - குருபாரம்பரிய வாசகம்.

இதன்படி, கருவூர்த் தேவர் குருபாரம்பரியச் செப்பேடுகளையும், ஓலைச் சுவடிகளையும் கடல் கடந்த நாடுகளுக்கு அனுப்பினார் என்ற வரலாற்றுப் பேருண்மை புலனாகின்றது.
5.
நண்பர்களே! குருபாரம்பரியத்தை முழுமையாக வெளியில் கூறக் கூடாதுஎன்ற தடையும், யாரும் 'குருபாரம்பரியத்தை முழுமையாகக் கேட்கக் கூடாது' [தெரிதல், புரிதல்] என்ற தடையும் விதிக்கப் பட்டுள்ளன. எனவேதான், யாம் அவ்வப்போது நமது நண்பர்களுக்குக் குருபாரம்பரிய வாசகங்களை தனித் தனி நூல்களாகத் தொகுத்தும்.... எம்மால் முடிந்தவரை எதையும் பொதுமக்கள் தெரியாத இரகசியம் என்று காக்காமல் செயல்படுகிறோம். இதேபோல் யாம், எவ்வித சாதி, சமய, இன, மொழி, நாட்டு... வெறுபாடு கருதாமலேயே அருளுலக வாரிசுகளை உருவாக்கி வருகின்றோம். ஏனென்றால், குருபாரம்பரிய வரலாற்றுப் படி எம் காலத்தில் அருளாட்சி அமைந்தே தீர வேண்டும். இதனைத் தஞ்சைத் தாத்தாவின் ஆணை வழிக் கல்வெட்டுகளும் வலியுறுத்துகின்றன. எமக்குக் கிடைத்து வரும் வெற்றிகளும், தோல்விகளும், தோல்வி மாற்ற வெற்றிகளும்.... எம்மால் அருளாட்சி அமைக்க முடியும் என்ற கருத்தைத் தெளிவாக்குகின்றன. இப்போது, தாத்தா கருவூர்த் தேவரின் முதன்மையான மாணாக்கர்களின் மறுபிறப்புக்களான நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பழம்பிறப்புக்கள் பற்றிய நினைவுகள் மலர, மலர, வளர, வளர, செழிக்கப் பல வரலாற்றுப் பேருண்மைகள் வெளிப்பட்டிடும். அவற்றால், சமய, சமுதாய, அரசியல் நன்மைகள் பல விளைந்திடும். எனவே, நீங்கள் ஆர்வமுடனும், அறிவுடனும், அக்கரையுடனும், பெருமுயற்சியுடனும் பதினெண் சித்தர்கள் வழங்கியுள்ள ஞானங்களையும், விஞ்ஞானங்களையும், பிற அறிவியல் கலைகளையும் கற்றுத் தேர்ந்து பயிற்சி செய்ய முற்படுங்கள். உங்களுடைய அநுபவங்களால்தான் இந்து மதத்தின் அருமை, பெருமைகள் மக்களுக்குப் புரிவிக்கப்படல் வேண்டும்.
6.
நண்பர்களே! நமது நாட்டில் ஏழைகள் மிகுதியாகிக் கொண்டே போகிறார்கள். இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி ஏழைகளே இல்லாத ஒரு சமுதாயத்தை நம்மைப் போன்ற அருளாளர்களால்தான் அமைக்க முடியும். ஆனால், சீர்திருத்தம், புரட்சி என்று கூறிக் கொண்டு அயோக்கியர்களும், சுயநலக் காரர்களும், வெறியர்களும்.... நம் நாட்டுப் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுகளையும், அவற்றின் நிலைக் கலன்களையும், செயலகங்களையும், ஆணிவேர்களையும்... சிதைத்து வருகிறார்கள். இப்படிப் பட்ட நேரத்திலேதான் நாம் மிக வலுவோடும், நிறுவன நிர்வாகக் கட்டமைப்போடும், தெளிவான சட்டதிட்டக் கட்டுப்பாடுகளோடும் [வளர வேண்டும்]. இன்று புகழ், பதவி, அதிகார வெறியர்களும் தலைமையேற்று அகம்பாவத்தோடும் ஆணவத்தோடும் வாழுகிறார்கள். இவர்களின் தன்னல மோகமும் வேகமும் இவர்களைச் சமுதாய விரோதிகளாகவும், துரோகிகளாகவும் ஆக்குகின்றன. எனவே, இவர்களைத் திருத்த முற்படுவதை விடப் புதிய நல்லவர்களை வல்லவர்களாக்கி அனைத்திலும் தலைமை தாங்கச் செய்வதே நல்லது. அதுதான் அருளாட்சி அமைக்கும் முயற்சிப் பணி. இப் பணியின் அடிப்படை செயல்திட்டமே அருட்பணி விரிவாக்கத் திட்டம். எனவே, பலரோடும் அஞ்சல் தொடர்பு கொண்டும், நேரில் நெஞ்சம் திறந்து பழகியும் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைப் புரிந்து செயல்படுங்கள்.

திருமூலர் தமது திருமந்திரத்தில் பெரும்பாலும் சமசுக்கிருத மொழியைத்தான் பயன்படுத்தி யிருக்கிறார் என்று கூறுவது உண்மையா?




மோசமான மோசடியான இந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்
இந்துமத
மறுமலர்ச்சி வினாவிடைகள்

திருமூலர் தமது திருமந்திரத்தில் பெரும்பாலும் சமசுக்கிருத மொழியைத்தான் பயன்படுத்தி யிருக்கிறார் என்று கூறுவது உண்மையா
இதுதான் தமிழில் முதல் வேதம் என்பதால் சமசுக்கிருதத்தில் இருந்துதான் திருமூலர் கருத்துக்களைக் கடன் வாங்கினாரா?


     கடந்த
சில நூற்றாண்டுகளாக தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், மேதைகள், பேராசிரியர்கள் முறையாகவும், நிறையாகவும் பழந்தமிழ் நூல்களில் பயிற்சியும், ஆராய்ச்சியும் இல்லாதவர்களாகவே வாழ்ந்து வருகின்ற காரணத்தினால்; பெரும்பாலானவர்கள் சமசுக்கிருத மொழியின் அடிமைகளாகவும், ஆரிய மாயையில் சிக்கித் தவிப்பவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். எனவேதான், தமிழ்ச் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும், சமசுக்கிருத சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இது பற்றி பல்லாயிரக் கணக்கான சமசுக்கிருத சொற்களை தமிழ்மொழியிலிருந்து சமசுக்கிருதத்தில் கடன் வாங்கப் பட்ட தமிழ்ச் சொற்களே என்று இன்றைய ஞாலகுரு சித்தர் கருவூறார் எடுத்துக் காட்டி வருவதைச் சான்றாகக் கொள்ளலாம். அதாவது தமிழ் மொழியிலிருந்து பிறந்ததே சமசுக்கிருதம். இதை விடுத்து சமசுக்கிருதம் என்ற இந்த மகள் ஈன்ற குழந்தையே இவளின் தாய் ஆகிய தமிழ் என்று கூறுவது அடிமுட்டாள்தனம்.

           
சத்தி நீ பாதம் என்று திருமூலர் குறிக்கும் முத்தி நிலை சத்தி + நிபாதம் என்று சமசுக்கிருதச் சொல்லாகப் பிரித்தே பொருள் சொல்லப் படுகிறது. ஆனால், இது 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் போதுஇவன் சத்தி நீ பாதம் என்ற முத்தி நிலையை அடைந்த பிறகே வடநாட்டுப் படையெழுச்சியில் ஈடுபட்டான்என்று தமது அரச பாரம்பரியத்திலும் குருபாரம்பரியத்திலும் குறிக்கிறார்.

  
சத்தி நீ => இனி நீ சத்தி வடிவாகவே மாறி விட்டாய்; சித்திகளைப் பெற்று நீ சத்தி நிலையாளனாகி விட்டாய்.

  
பாதம் => இனி நீ, பிறரின் பாதம் போல் பணிவுடன் தான் செயல்படல் வேண்டும். யாருக்கும் சாபம் கொடுத்தல் கூடாது என்று சத்தி நீ பாத நிலை பெற்றவர்க்கு அறிவுரை, அருளுரை வழங்கப் படுகிறது குருபாரம்பரியத்தில்.

           
எனவே, சித்தர்களின் தூய வாய்மைமிகு உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் பழமையான சொற்களையும், சொற்றொடர்களையும் தெரியாத புரியாத.... தமிழ் வல்லார்கள் திருமூலரின் அழகிய ஆழமான பொருள் மிக்க அமுதத் தமிழ் சொற்களையும், சொற்றொடர்களையும், வடமொழிச் சொற்களாகவும், சொற்றொடர்களாகவும் தவறுதலாகக் கூறுகிறார்கள். இது தவறு. கண்டிக்கத் தக்கது, வருந்தத் தக்கது. முறையாகக் கற்று நிறையான தமிழ்ப் புலமை இல்லாதவர்களாக இதுபோல் எண்ணற்ற துரோக விரோதக் கருத்துக்களும் செயல்களும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவற்றைக் கண்டித்தேயாக வேண்டும்.
 

வழக்கில் உள்ள சில சொற்களின் உண்மைப் பொருள்:

இலிங்கம் என்பதின் விளக்கம்:

இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல். (லிங்கம் அல்ல). இலிங்கம் தான் முதலில் ஏற்பட்ட, 50 இலட்சம் வருடத்திற்கு முந்தைய தமிழ்ச் சொல்.

இலிங்கம் என்றால் உயிர், அணு.


ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும்.

ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம்.
உயிரின் இரகசியம்தான் இலிங்கம்.

இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு.
இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு.
இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம்.
இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள்.
 

இலிங்கம் - ஆவி ஆன்மா உயிர் எந்த நிலையில் உள்ளன என்பதை விளக்கும் சின்னம், அடையாளம். ஆனால், அப்பாவி அறைகுறைத் தமிழ் வல்லார்கள்லிங்கம்என்ற வடசொல்லேஇலிங்கம்என்று தமிழில் எழுதப் படுவதாகக் கூறுகிறார்கள். வெட்கம்! வெட்கம்! வெட்கம்! வேதனை! வேதனை! வேதனை! சோதனை! சோதனை! சோதனை!

 

பூஜை என்பதற்குரிய தமிழ்ச் சொல் என்ன? விளக்கம் என்ன?
'பூ' வினால் இறை [48 வகை] வழிபாடு செய்யப்படுவதே 'பூசை' என்று தமிழில் குறிக்கப் படுகின்றது. இதனைத்தான் 'பூஜை' என்று வடமொழியில் குறிக்கின்றனர்.

 

சக்தி என்று குறிக்கப்பட்டு வரும் சொல்லை சத்தி என்றே குறிக்க வேண்டும், ஏன்?
சத்தி என்ற சொல் சக்தி என்று தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. தமிழ்மொழி வழக்கப்படி 'க்' என்ற எழுத்துக்குப் பிறகு 'கி' அடியற்றி வர வேண்டும். சக்கி என்றுரைத்தல் இவ்விடத்தில் பொருளற்றது. எனவே, சத்தி என்றே குறிக்க வேண்டும். இதே போல் பத்தி (பக்தி), சத்தி (சக்தி), சித்தி, முத்தி (முக்தி) என்றே பதினென்சித்தர்கள் தங்கள் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர்.

 

அனைத்துக்கும் பொதுவாக 'மந்திரம்' என்று இடையின 'ர' குறித்து எழுதி வருவது சரியா' விளக்கம் தேவை. பதினெண் சித்தர்கள் மந்திறம், மந்திரம், மந்தரம், மாந்தரம், மாந்தரீகம் என்று ஐந்தைக் குறிக்கின்றார்கள். ஆனால் காலப்போக்கில் 'மந்திரம்' என்ற சொல் மட்டுமே மக்களுக்குத் தவறாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால் இந்த ஐந்தையும் அறிய முடியாமல் போய்விட்டது. எனவே, மக்களின் சிந்தனையைத் தூண்டத்தான் மந்திரம் என்ற சொல் தற்போது கையாளப் படுகின்றது.

வழக்கில் உள்ள திருமந்திரம் என்ற நூலுக்கு அது மனதைத் திறமைப் படுத்துவதற்காகப் பயன்படக் கூடிய ஒன்று (மனது + திறம் = மந்திறம்) என்று குறிக்கப் பட்டு 'திருமந்திறம்' என்றே சித்தர்கள் பயன் படுத்தியுள்ளனர். இதைப் பன்முறை வற்புறுத்தியும் பலர் இடையின் 'ர' உபயோகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் திருந்த வேண்டும்.



பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லா?
  பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லே!

  பட்டு + ஆள் + அம் = பட்டாளம்

  பட்டு = துஞ்சுதல் = தற்கொலை

போரில் தன்னை முன்னிறுத்தி மாய்த்துக் கொள்கின்ற ஆட்கள் கொண்ட அமைப்பு. பிற்காலச் சோழப் பேரரசில் தாத்தா கருவூறார் பட்டாளத்தை உருவாக்கினார் என்பது குருபாரம்பரிய ஏடுகளில் காணப்படுகின்றது. பட்டாளம் என்ற தற்கொலைப் படையையே இராசராச சோழன் உருவாக்கிச் செயல்பட்டான் என்றும் உள்ளது.