பதினெண் சித்தர் பீடாதிபதிகள் (ஞானாச்சாரியார் போற்றி)


இதுவரை தோன்றியுள்ள பன்னிரெண்டு பதினெண் சித்தர் பீடாதிபதிகள் (ஞானச்சாரயார் போற்றி):

ஞானாச்சாரியார் போற்றி
ஓம் அனாதிக் கருவூறாரே போற்றி!
ஓம் ஆதிக் கருவூறாரே போற்றி!
ஓம் தொன் மதுரைக் கருவூறாரே போற்றி!
ஓம் தென் மதுரைக் கருவூறாரே போற்றி!
ஓம் குமரியாற்றங்கரைக் கருவூறாரே போற்றி!
ஓம் பஃறுளியாற்றங்கரைக் கருவூறாரே போற்றி!
ஓம் கபாடபுரத்துக் கருவூறாரே போற்றி!
ஓம் தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறாரே போற்றி!
ஓம் வைகையாற்றங்கரைக் கருவூறாரே போற்றி!

ஓம் ஐம்புலன்களும் காணவாழும் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, இந்துமதத் தந்தை,தத்துவ நாயகம், அருளாட்சி நாயகம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களே!
            போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
            சரணம்! சரணம்! சரணம்! சரணம்!

ஓம் ஐம்புலன்களும் காண வாழும் பதினொன்றாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, மடாதிபதி,
இந்துமதத் தந்தை, தத்துவ நாயகம், அருளாட்சி நாயகம், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களே, அண்ட பேரண்ட அருட்பேரரசர் அவர்களே!
            போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
            சரணம்! சரணம்! சரணம்! சரணம்!

ஓம் ஐம்புலன்களும் காண வாழும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, மடாதிபதி,
இந்துமதத் தந்தை, தத்துவ நாயகம், இந்துவேத நாயகம், அருளாட்சி நாயகம், நான்குயுக நாயகம், பரப்பிறம்மம், எல்லாம் வல்ல சித்தர், நிறையக்ஞர், கருவறை மூலவர்களின் அம்மையப்பர், ஞானாச்சாரியார், இந்துமத ஆச்சாரியார், இராசிவட்ட நிறைவுடையார், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், குருமகா சன்னிதானம், குருதேவர், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களே!
            போற்றி! போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
            சரணம்! சரணம்! சரணம்! சரணம்! சரணம்!

No comments:

Post a Comment