மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 2)



மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 2)

(சித்தர் நெறி – சிவநெறி – இந்துமதம்.)

பதினெண் சித்தர் பீடாதிபதிகள்:

மானுடம் பண்நெடுங்காலம் வாழ்வதற்கு வாழ மறை, முறை, நெறி, வேதம் என்பனவற்றை, (இந்துமத நூல்கள்) 48 வகைகளாக, மூல நூல்களை ஆக்கித் தந்தவர்கள் “பதினெண் சித்தர் பீடாதிபதிகள்”.

      இந்து மதத்தின் காவலர்களாக, காப்பாளர்களாக, பொறுப்பாளர்களாக தமிழ் இனத்தில் காலம் தோறும் தோன்றி “குரு பாரம்பரியம்”, “அரச பாரம்பரியம்”, “இலக்கிய பாரம்பரியம்” என மண்ணுலகின் வரலாற்றை எழுதி தொகுத்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டவர்கள்தான் “48 பதினெண் சித்தர் பீடாதிபதிகள்” ஆவார்கள்.

      சித்தர்கள், பதினெண் சித்தர்கள், பதினெண் சித்தர் பீடாதிபதிகள் என 43,73,112 (நாற்பத்து மூன்று லட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து நூற்றி பன்னிரெண்டு ஆண்டுகள், ஆங்கில ஆண்டு கி.பி. 2011 கணக்கின் படி) ஆண்டுகளாக தோன்றி, வாழ்ந்து சமாது ஏகி மானுடம் செழிக்க, தழைக்க முறை செய்தார்கள். இவர்களுக்கு முன்பாக வாழ்ந்து ஆய்வுகள் நிகழ்த்தி மறை, முறை, நெறி, வேதங்களை தந்தவர்கள் “மூலப்பதினெண் சித்தர்கள்”.

      மூலப்பதினெண் சித்தர்கள், மண்ணுலகின் முதல் நிலப்பரப்பான இளமைமாறாத கண்டம் (லெமூரியா கண்டம்) என்ற திருவிடத்தில் (திராவிட மண்ணில்) பக்குவப்படுத்தப்பட்ட மனிதர்களில் சிறந்த மானுடர்களை தேர்வு செய்து முதல் மண்ணின் தலைவனாக, மண்ணீசனாக. அதாவது முதல் சிவபெருமானாக, அனாதி சிவனாக, மண்ணுலகின் முதல் பீடாதிபதியாக “அனாதிக் கருவூறார்” அறிவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment