மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 3)



மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம். (பகுதி 3)

(சித்தர் நெறி – சிவநெறி – இந்துமதம்.)

மெய்யான இந்துமதம்:

இந்து மதத்தின் பிறப்பிடம் “இளமுறியாக்கண்டம்” (The Lost Lemuria) எனும் கடலில் மறைந்த “குமரிக்கண்டம்” ஆகும்.

      43,72,112 ஆண்டுகளுக்கு முன்பாக மூலப்பதினெண் சித்தர்களால் அனாதி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மண்ணுலகின் முதல் மொழியாம் விண்ணுலக மூல மொழியாம் தமிழ் மொழியில் “திருவிடத்தாருக்கு” என தரப்பட்டதே தெய்வீக செந்தமிழ் மொழியாம், அமுத மொழியாம் “தமிழ்” மொழியாகும்.

      இந்து மதத்தை வளர்த்திட “48 வகைச் சித்தர்கள்”, “48 வகை வழிபடுநிலையினர்”, “அருட்சத்தி பெற்றோர்” (பூசாறி, ஆச்சாரி, மருளாளி, அருளாளி) என உருவாக்கப்பட்டார்கள், செயல்பட்டார்கள்.

      இந்து மதத்தின் பயன்களாக “தனிமனித வாழ்வு”, “குடும்ப வாழ்வு”, “சமுதாய வாழ்வு”, “அரசியல் வாழ்வு” எனும் நான்கையும் வடிவப்படுத்தி தந்திட்டார்கள்.

      இந்து மதம் என்பது “முன்னோர் வழிபாடு”, “மூத்தோர் வழி நடத்தல்” ஆகும்.

      வழிபாட்டு நிலையங்களாக “108 திருப்பதிகள்”, “243 வகை சத்தி பீடங்கள்”, “1008 வகை சிவாலயங்கள்” அமைக்கப்பட்டன.

      பயிரின, உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்நிலைகள் மற்றும் உள்ள நிலைகளுக்கு ஒலி மற்றும் ஒளி அலைகள் மூலமும், மருந்துகள் மூலமும் நலம் பெற சித்தர்கள், “சித்த மருத்துவம்”, “சித்தர் மருத்துவம்” என பக்கவிளைவற்ற வகையில் பரிகாரம் வழங்கினார்கள்.

      அருளூறு பாதிப்புகளை சரி செய்வதற்க்காக எண்ணற்ற ஐம்பூத விதி தத்துவ சித்தாந்தங்களின்படியும், அனுபவபூர்வமான ஆண், பெண், திருநங்கை அணுக்களை பகுத்தும், சேர்த்தும், தொகுத்தும், கலந்து உயிரூட்டியும், சினைப்படுத்தியும் மற்றும் மறை, முறை பூசைகள் வாயிலாகவும் நோய் தீர்க்க வழிவகை செய்திட்டார்கள்.

      மண் அணுக்களோடு, விண்ணணுக்களை இணைக்கின்ற முறை தெரிந்த சித்தர்கள், எந்த அண்டத்தில் இருந்து இம்மண்ணுலக தாதுக்கள் வந்து சேர்ந்தது என ஆராய்ந்தும், விண்ணணுக்கள், மண்ணணுக்களோடு இணைப்பு செய்வதால் ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய்ந்தும், அதன் பலங்களைப் பொறுத்து அவற்றை மறையாகவும், முறையாகவும் மானுடர்களுக்கு கிடைக்க வழி செய்தார்கள்.

      விண்ணுயர்ந்த கோபுரங்களை எழுப்பி கட்டி, ஏழு பெருவெளிகளையும் தாண்டி எண்ணற்ற கோடிக்கணக்கான அண்டம், பிண்டம், பேரண்டம், அண்ட பிண்ட பேரண்டம், அண்ட பேரண்டம் வரை தங்களின் நுட்பமிக்கு சூத்திர, சாத்திற, நேத்திரங்களின் துணையோடு, மண்ணுலக அணுக்களோடு, விண்ணுலக அணுக்களை இணைப்பு செய்து சிவசத்தி திருப்பதி அணுக்களை உருவாக்கி, கருவாக்கி, உயிர்ப்பித்து மண்ணுலகம் செழிக்க வகை செய்திட்டார்கள்.

      மானுட ஆவி, ஆன்மா, உயிர், பசு, பதி, பாசம் இவற்றை பக்குவப்படுத்தவும், உடலை பக்குவப்படுத்த “காயந்திரி சித்திகளையும்”, மனதை பக்குவப்படுத்த ஒலி, ஒளி அணுக்களை கொண்டு “மந்தரங்கள்”, “மந்திரங்கள்”, “மந்திறங்கள்” ஆக்கித் தந்திட்டார்கள்.

      48 வகை வழிபாட்டு நிலைய கருவறைகளை, புதிய கருவறை கோவில் என்றால் இரவு பதினோறு மணி முதல் நள்ளிரவு ஒன்று முப்பது மணிக்கு கருவறை உயிர்ப்பு அதாவது (குடமுழுக்கு) நிகழ்த்தப்பட வேண்டும் என்றும், பழைய கருவறை புத்துயிர்ப்பு என்றால் பகல் பதினோறு மணி முதல் நண்பகல் ஒன்று முப்பது மணிக்குள்ளாக (குடமுழுக்கு நிகழ்த்தப்பட வேண்டும்). இதுவே அருளுலக நேரம் என்றும் அதற்கு “இலை குலுங்கா நடுநிசி” என்றும் “விண்ணோக்கி இமைவிரியா உருமவேளை” என்றும் குறித்துள்ளார்கள். அப்போதுதான் நிலையான அருளூற்றாக செயல்படும் கருவறை முறையாக தயாராகும் என குறிக்கின்றார்கள்.

      அதாவது, குடமுழுக்கு சாத்திரம், சாத்தரம், சாத்திறம், கருவறை உயிர்ப்பு நூல், புத்துயிர்ப்பு நூல், எழுந்தருளி உயிர்ப்பு, புத்துயிர்ப்பு நூல், பிறாணாயாம சாத்திரம், சாத்தரம், சாத்திறம், காயந்திரி நூல் சாத்திரம், சாத்தரம், சாத்திறம், குண்டலினி ஓகம் என்ற அனைத்து சமய நூல்களிலும் சித்தர்கள் குறிக்கின்றார்கள்.

      பெண்களே அருளுலகில் சத்திகளை, சித்திகளை, பெற்றுத் தரும் செல்ல குழந்தைகள், பெண்களே அருளூற்று ஆக திகழ்கின்றார்கள்! பெண்வழிச் சேரலே கருவையும், தருவையும், திருவையும் அடைய வழி!... என்றும் சித்தர்கள் குறிக்கின்றார்கள்.

      பதினெண் சித்தர்கள் அருளுலக வாழ்வில் ஈடுபடுபவர்களின் நிலைகளில் பதினாறு வகையாக “அறவி, ஆறவி, இறவி, உறவி, கறவி, துறவி, திறவி, பறவி, பிறவி, புறவி, பைறவி, நறவி, மறவி, மைறவி, வறவி, வேறவி” என குறிக்கின்றனர்.

      பதினெண் சித்தர்கள், வழிபடு நிலையினரது நாற்பத்து எட்டு வகைகளை “அப்பன், ஆயாள், கரு, குரு, தரு, அல்லா (எல்லா), பரம்பொருள், மகாப்பொருள், ஏகப்பொருள், அநேகப்பொருள், முத்தி, ஐந்தீ, பாழ்வெளி, வெட்டவெளி, கருவறை, இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், ஆளுபவர், படாதவர், தேவியர், அமரர், அருவத்தார், உருவத்தார், அருவுருவத்தார்”… என குறிக்கின்றார்கள். இத்துடன் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் வழிபாட்டுக்கு உரியவை என்றும் குறிக்கின்றார்கள்.

      பதினெண் சித்தர்கள் “தமிழ் மொழி”யில் “முறைகள், நெறிகள், வேதங்கள், சித்தங்கள், நாதங்கள், போதங்கள், ஓதங்கள், தத்துவங்கள், ஆகமங்கள், மீமாம்சைகள், நிடதங்கள், துணை நிடதங்கள், இணை நிடதங்கள், ஆரணங்கள், சாத்திறங்கள், சூத்திரங்கள், தோத்திறங்கள், நேத்திறங்கள், அத்திறங்கள்” என “1359” (ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஒன்பது) வகையான இலக்கியங்கள், இலக்கணங்கள் எழுதி குவித்துள்ளனர்!

      கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயகம், கலியன் உகம் இவற்றின் காலக்கணக்கீடு, மேற்படி காலத்தில் உருவான, நிகழ்ந்த புராணங்கள், தேவ, அசுர, மானுடர், சூரியகுல காக்கையர், தோற்றத்தார் (அவதாரத்தார்), பதிலிகள், அரக்கர், தேவவாரிசுகள், மாயாசத்தியாளர்கள் முதலியோர்களிடையே நடந்த போர் மற்றும் வரலாற்றையும். மேலும், குருகுலத்தார் ஆட்சிக்கால வரலாறு மற்றும் கலியுகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து வட ஆரியர்களின் வெறியாட்ட வரலாறு யாவற்றையும் பதினெண் சித்தர்கள், சித்தர்கள், பீடாதிபதிகள் எழுதிக் குவித்து உள்ளார்கள்.

(மெய்யான இந்து மதம் – ஓர் அறிமுகம் : முற்றும்.)

No comments:

Post a Comment