சித்தர்கள் வரலாறு



     இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்.... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்

     இவர்களின் அடிப்படையில்,
64 ஆயகலைகள்,
48 அருட்கலைகள்,
9 கடவுட்கலைகள்,
9 தெய்வீகக் கலைகள்,
9 நோய்க் கலைகள்,
9 பேய்க்கலைகள்,
9 தேய் கலைகள் 
என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றின் செயலகங்களாக ஆதியில் 108 திருப்பதிகள், 243 சத்தி பீடங்கள், 1008 சிவாலயங்கள் படைக்கப் பட்டன.

     கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும், தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட  வகைகளாக வளர்ந்து விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத் தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக் கிறார்கள். இவற்றை யெல்லாம் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் இருக்கின்ற இந்து மதத்தில்தான் இடையீடு இல்லாத முறையான தொடர்ந்த வளர்ச்சி நிலைகளில் காண முடிகின்றது. எனவேதான், உலக மதங்கள்  அனைத்தையும் இந்து மதத்தின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடிகின்றது

சித்தர்கள் யார்?
     பதினெண் சித்தர்கள் என்று இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் பட்டியலைச் சேர்ந்தவர்கள் உண்மையில் 48 வகைச் சித்தர்கள் ஆவார்கள். இவர்கள் பதினெண்சித்தர்கள் அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல.

        மூலப் பதினெண் சித்தர்கள் என்பவர்கள் இந்த மண்ணுலகத்திற்கு வேற்று அண்டங்களிலிருந்து இந்த உலகம் தோன்றிய காலத்தே  வந்தவர்கள். அவர்கள் இந்த மண்ணுலக உயிரினங்களிலேயே உயர்ந்த மணீசரைப் பண்படுத்தி மனதை யுடைய மனிதர்களாக்கினார்கள்இதற்கு அவர்கள் பயன்படுத்திய மொழி இந்தப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழி.  அதனாலேயே தமிழ்மொழி "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மொழி" என்று குறிப்பிடப் படுகின்றது.

    இந்த மூலப் பதினெண்சித்தர்கள் மண்ணுலக மனிதர்களோடு உறவு பூண்டு நேரடி வாரிசுகளை உண்டாக்கினார்கள். "பதினெண்சித்தர்களின் வழிவந்தவர்களே பதினெண் வேளிர்கள்" என்றொரு முன்னோர் வாக்கு இதனையே குறிக்கின்றது. இந்த வாரிசுகள் வழிவந்தவர்கள் காலப் போக்கில் அருளுலகப் பயிற்சி முயற்சிகளில் தேர்ச்சி பெற்று சித்தர்கள் நிலையை அடைந்திடுகின்றனர்.  அப்படி சித்தர் நிலையை அடைந்தவர்கள் 48 வகைச் சித்தர்களில் ஒருவராக அருளுலகத்தாரால் ஏற்றுக் கொள்ளப் பட்டனர்.

பதினெண்சித்தர் பீடாதிபதிகள் நிகழ்த்தும் ஏட்டுலகப் புரட்சியும், நாட்டுலகப் புரட்சியும்:
      பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிடும் பொழுதுதான் 48 வகைச் சித்தர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்பக் கூறப்படும் கருத்துக்களையும் ஒருமுகப் படுத்தித் திருத்திப் பதினெண் சித்தர்களின் அண்டபேரண்டங்களை ஆளும் இந்துமதத்தின் மெய்யான, முறையான, முழுமையான வடிவமைப்புக்கள் உருவாக்கப்படும். எனவே, பதினெண் சித்தர் பீடாதிபதிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய காலத்தில் உள்ள குறைகளுக்கும், முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும், பிழைகளுக்கும், தேய்வுகளுக்கும், ஓய்வுகளுக்கும், திரிபுகளுக்கும், முறிவுகளுக்கும்.... உரிய பரிகாரங்களைச் செய்வதற்காகவே மீண்டும் குருபாரம்பரியமும், இலக்கிய பாரம்பரியமும், அரச பாரம்பரியமும், கருவாக்கியம், கருவாசகம், குருவாக்கியம், குருவாசகம், தருவாக்கியம், தருவாசகம், திருவாக்கியம், திருவாசகம், அருள்வாக்கியம், அருள்வாசகம், மருள் வாக்கியம், மருள் வாசகம்.... முதலிய பல வகைப்பட்ட இலக்கியங்களைப் படைத்து ஏட்டுலகப் புரட்சியைச் செய்கின்றனர்.

     பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தங்கள் தங்கள் காலத்து மக்களுடைய அறிவு, ஆர்வம், ஆற்றல், உழுவலன்பு, உண்மை, ஊக்கம், நம்பிக்கை, பத்தி, முயற்சி நிலை, பயிற்சி நிலை, .... முதலியவைகளுக்கேற்ப மக்களிடையே பலரைத் தேர்ந்தெடுத்து இட்டும், தொட்டும், சுட்டியும், அருள் வழங்கி சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், விருப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள், பதிலிகள், மகன்கள், மகள்கள், குருவழி வாரிசுகள், உரிமைச் சுற்றங்கள் .... எனப்படும் அருளுலக வாரிசுகளை உருவாக்கி நாட்டு நடப்பில் நாட்டுலகப் புரட்சியை  செய்கிறார்கள்.
    
      பதினெண் சித்தர்களின் நாட்டுலகப் புரட்சியைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், புரியாதவர்கள், நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், மத வெறுப்பாளர்கள்... முதலியோர் பதினெண்சித்தர்கள் தோற்றுவித்ததுதான் இந்துமதம் என்ற பேருண்மையைத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாகவே ஆகி விடுகிறார்கள். எனவேதான்அவர்கள் பதினெண் சித்தர்களின் உண்மையான இந்துமதத்திற்குள் 48 வகைச் சித்தர்களின் கருத்துக்களை மோத விட்டு குழம்பித் தவிப்பார்கள்.  இந்த நிலையே இப்போது நம் நாட்டில் நிலவுகின்றது.

48 வகைப்பட்ட சித்தர்கள் பற்றிய விளக்கம்...
      இன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் 
நந்தி,
அகத்தியர்,
திருமூலர்,
புண்ணாக்கீசர்,
புலத்தியர்,
பூனைக் கண்ணர்,
இடைக்காடர்,
போகர்,
புலிப்பாணி,
கொங்கணவர்,
காளாங்கி,
அழுகண்ணர்,
அகப்பையர்,
பாம்பாட்டிச் சித்தர்,
தேரையர்,
குதம்பையர்,
சட்டைநாதர் ... 
 என்ற பட்டியலில் உள்ளவர்கள் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.

குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:
பதினெட்டாம்படிக் கருப்புகள்
நவகோடி சித்தர்கள்
நவநாத சித்தர்கள்
நாத சித்தர்கள்
நாதாந்த சித்தர்கள்
வேத சித்தர்கள்
வேதாந்த சித்தர்கள்
சித்த சித்தர்கள்
சித்தாந்த சித்தர்கள்
தவ சித்தர்கள்
வேள்விச் சித்தர்கள்
ஞான சித்தர்கள்
மறைச் சித்தர்கள்
முறைச் சித்தர்கள்
நெறிச் சித்தர்கள்
மந்திறச் சித்தர்கள்
எந்திறச் சித்தர்கள்
மந்தரச் சித்தர்கள்
மாந்தரச் சித்தர்கள்
மாந்தரீகச் சித்தர்கள்
தந்தரச் சித்தர்கள்
தாந்தரச் சித்தர்கள்
தாந்தரீகச் சித்தர்கள்
நான்மறைச் சித்தர்கள்
நான்முறைச் சித்தர்கள்
நானெறிச் சித்தர்கள்
நான்வேதச் சித்தர்கள்
பத்த சித்தர்கள்
பத்தாந்த சித்தர்கள்
போத்த சித்தர்கள்
போத்தாந்த சித்தர்கள்
புத்த சித்தர்கள்
புத்தாந்த சித்தர்கள்
முத்த சித்தர்கள்
முத்தாந்த சித்தர்கள்
சீவன்முத்த சித்தர்கள்
சீவன்முத்தாந்த சித்தர்கள்
அருவ சித்தர்கள்
அருவுருவ சித்தர்கள்
உருவ சித்தர்கள்
 ... 
 பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.
எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"
எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்
ஏதமில் நிறை சித்தர் எழுவர்
விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்
-- என்று பல குறிப்புகள் உள்ளன.


1 comment: