மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாட்டு அட்டவணை. விரிவஞ்சி
ஒரு சில
வேறுபாடுகள் மட்டுமே இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.
இவற்றை அடிப்படையாக
வைத்து நாட்டு
நடப்பில் உள்ள
மதச் செயல்பாடுகளை
ஆராய்ந்தால் எண்ணற்ற வேறுபாடுகளை பிரித்துணரலாம்.
|
தமிழரின்
இந்துமதம் |
பிறாமணரின்
ஹிந்துமதம் |
|
கடலுள் மறைந்த குமரிக் கண்டமெனும் இளமுறியாக் கண்டத்தில் பிறந்தது |
பிறமண்ணினரான பிறாமணர்கள் எனும் வட ஆரியர் இன்றுள்ள வட இந்தியாவிலுள்ள சிந்து, கங்கை சமவெளியில் குடியேறிய பிறகு தமிழருடைய இந்துமதத்தின் அடிப்படையிலே உருவாக்கியது. |
|
நான்கு யுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பது |
நான்காவது உகமான கலியுகத்தில் 2000 ஆண்டு கழித்தே பிறந்தது. |
|
43,73,111 ஆண்டு காலப் பழமை உடையது. |
3000 ஆண்டுகாலப் பழமை உடையது |
|
எல்லோரும் வேதங்களை ஓதலாம் என்று கூறுவது |
பிறாமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதலாம் என்று கூறுவது |
|
தமிழ் மொழியையே அருளாட்சி மொழியாக உடையது |
சமசுக்கிருத மொழியையே அருளாட்சி மொழியாக உடையது |
|
நான்மறை, நான்முறை, நான்நெறி, நான்வேதம் என்று நூற்றெட்டுப் பூசைமொழி நூல்களை உடையது |
ரிக், யஜுர், ஜாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களைக் கொண்ட பூசைமொழி நூலை உடையது |
|
அருள் வந்து ஆடி அருட்செயல்களை நிகழ்த்தும் மரபை உடையது |
அருள் வருவதையே நம்பாத, விரும்பாத மரபுடையது |
|
இல்லற வாழ்வே நல்ல அறவாழ்வு என்ற கொள்கையை உடையது |
துறவற வாழ்வே நல்ல அறவாழ்வு என்ற கொள்கையுடையது |
|
சாதிமத வேறுபாடோ, உயர்வு தாழ்வோ இல்லாத சமத்துவ மெய்ஞ்ஞான மதம் |
சாதிமத வேறுபாட்டு வர்ணாசிரமத் தர்மத்தையும், சாதிமத உயர்வு தாழ்வு தீண்டாமைக் கொள்கைகளையும் உடைய சனாதன மதம் |
|
ஒரே ஒரு வகைப்பட்ட காதல் திருமண விதிமுறையையே உடையது |
எட்டு வகைப்பட்ட திருமண விதிமுறைகளை உடையது |
|
மண்ணுலக விண்ணுலகக் கடவுள்களைக் கூறுவது |
விண்ணுலகக் கடவுள்களை மட்டும் கூறுவது |
|
அருவ அருவுருவ உருவ உருவருவ வழிபாடுகள் நான்கையும் கூறுவது |
தானே பிரம்மம் எனும் மாயாவாதத்தைக் கூறும் அருவ வழிபாட்டைக் கூறுவது |
|
இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம், அம்மன், நந்தி எனும் ஐவரையும் மூலமாக, முதலாகக் கொண்டு வழிபடுவது |
இலிங்கத்தை மட்டும் வழிபடுவது |
|
திருநீறு, குங்குமம், சந்தனம், சாந்து, திருமண், மை, மஞ்சள் முதலியவற்றை அருளூறு பூசனைப் பொருட்களாக நெற்றியில் அணிவது |
திருநீறு மட்டுமே அணிவது |
|
இப்பிறப்பு, முற்பிறப்பு, மறுபிறப்பு எனும் முப்பிறப்புக் கொள்கைகளை உடையது |
ஒரே பிறப்புக் கொள்கையுடையது. |
|
பெண்ணை அருளுலக வாழ்வுக்குரியவள் என்று ஏற்கிறது. |
பெண்ணை அருளுலக வாழ்வுக்குக் கூடாது என்று மறுக்கிறது |
|
அறவி, உறவி, மறவி துறவி எனும் நான்கு வகையான வாழ்வியல்களும் அருளுலகத்திற்கு ஏற்றவையே என்ற கொள்கையை உடையது. |
துறவி வாழ்க்கை ஒன்றுதான் அருளுலக வாழ்விற்கு ஏற்றது என்று கூறுவது |
|
அவரவர் தாய்மொழியில் அவரவருடைய முன்னோர்களை வழிபடுவதே அருளுலக வாழ்க்கையாகும் என்ற கொள்கையை உடையது |
எவருக்கும் தொடர்பில்லாத புராண இதிகாசக் கடவுள்களை சமசுக்கிருத மொழியில் மட்டுமே வழிபடுவதுதான் அருளுலக வாழ்க்கை என்ற கொள்கையை உடையது |
|
எவர் வேண்டுமானாலும் பூசைகளைச் செய்யவும் மதத் தலவராக வாழவும் முடியும் என்று கூறுவது |
பிறாமணர்கள் மட்டும் பூசைகளைச் செய்யவும் மதத் தலைவர்களாக வாழவும் முடியும் என்று கூறுவது |
|
அருளை அநுபவப் பொருளாக பிறருக்கு வழங்கும் அருளாளிகளையும் மருளாளிகளையும் உடையது |
அருளை பிறர்க்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று தயங்குபவர்களை உடையது |
|
48 வகைக் கருவறைகள், 48 வகை வெட்டவெளிக் கருவறைகள், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகள் ஆகிய 144 வகைப்பட்ட கருவறைகளையும் ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்துப் பயனடைவது. |
48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளை மட்டுமே ஏற்றுப் போற்றிப் பேணிப் பாதுகாத்து பயனடைவது. |
|
இம்மண்ணுலகில் தோன்றிடும் மதங்கள் அனைத்தையும் தங்களுக்குத் துணையானவைகளாக ஏற்றுப் போற்றி நட்போடு வாழுவது |
இம்மண்ணுலகில் தோன்றிடும் மதங்கள் அனைத்தையும் தங்களுக்கு எதிரியாக, போட்டியாக நினைத்துப் பகையோடு சண்டையிட்டுக் கொண்டே யிருப்பது |
|
எத்தகையவரும் பயிற்சி முயற்சிகளால் அருளைப் பெற்று நலமடையலாம் என்று கூறுவது |
பெரிய பெரிய செல்வர்களும் மன்னர்களும் மட்டுமே யாகங்களை செய்து அருளைப் பெற்று நலமடையலாம் என்று கூறுவது |
|
‘மனிதன் தான் கடவுளாகிறான்’ என்ற தத்துவத்தையும் அதற்குரிய செயல் சித்தாந்தத்தையும் வழங்குவது. |
கடவுள் எப்பொழுதாவதுதான் மனித வடிவில் தோன்றுகிறார் என்ற புராண இதிகாசக் கதைகளைக் கூறுகிறது. |
|
கடவுள் இம்மண்ணுலக வாழ்வியலின் எல்லா வகையான உறவு முறைகளிலும் தோன்றி அன்பு செலுத்திக் காப்பவராகக் கருதுகிறது. |
கடவுளை விண்ணுலக வாழ்வின் தலைவராக, முதலாளியாக, சர்வாதிகாரியாகக் கருதுவது |
|
பொதுவாகக் கோயில்களில் ஒன்பது கோள்களையும் ஒரே நேர்கோட்டில் ஒரே திசையில் பார்த்திருக்கும்படி நிலைநிறுத்தி மக்கள் அருள்நலம் பெறச் செய்திட உதவியிருப்பது. |
ஒன்பது கோள்களையும் வெவ்வேறு திசைகளில் பார்த்திருக்கும்படி நிலைநிறுத்தி யாருமே அருள்நலம் பெறமுடியாமல் போகச் செய்திருப்பது. |
|
மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பகவதியம்மன், செல்லியம்மன், ... முதலிய 243 சத்திகளை ஏற்று வழிபடுவது |
மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பகவதியம்மன், செல்லியம்மன், ... முதலிய 243 சத்திகளை துஷ்ட தெய்வங்கள் என்று ஒதுக்கி வைப்பது |
|
எல்லா நல்ல செயல்களையும் ஆரம்பிப்பதற்குரிய பீடுடைய மாதமாக மார்கழியைக் கருதுவது |
எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாத பீடை மாதமாக மார்கழியைக் கருதுவது. |
|
புத்தாண்டு பிறக்கின்ற முதல் மாதம் தைமாதம் என்ற கணக்கினை உடையது. |
புத்தாண்டு பிறப்பது சித்திரை மாதம் என்ற கணக்கினை உடையது. |
|
வாரத்தின் நாட்கள் வெள்ளிக் கிழமையில் ஆரம்பித்து வியாழக் கிழமையில் முடிவது. |
வாரத்தின் நாட்கள் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பித்து சனிக்கிழமைய்ல் முடிவது. |
|
ஆதிசிவனார் காலத்திலிருந்து இன்று 2010 வரை இந்துமதம் தோன்றிய ஆண்டுக் கணக்கு நான்கு யுகங்களாகச் சேர்த்து மொத்தம் 43,73,111 ஆண்டு என்ற நெடிய தொடர் காலக் கணக்கீட்டு முறையிருக்கிறது. |
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலக் கணக்கீட்டை முடித்துக் கொள்ளுகின்ற முறையினை மட்டுமே உடையது. |
|
இராமாயண நாயகனான இராமதேவனை கங்கைக் கரைத் தமிழனென்றும் மகாபாரத நாயகனான கண்ணதேவனை யமுனைக் கரைத் தமிழனென்றும் மெய்ப்பிப்பது. |
இராமாயண நாயகனான இராமதேவனையும், மகாபாரத நாயகனான கண்ணதேவனையும் வட ஆரியர்களென்று கூறுவது.
|
No comments:
Post a Comment