மோசமான
மோசடியான இந்துமதக்
கருத்துக்களுக்குத் திருத்தம்
இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்
இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்
திருமூலர்
தமது திருமந்திரத்தில் பெரும்பாலும் சமசுக்கிருத மொழியைத்தான்
பயன்படுத்தி யிருக்கிறார் என்று கூறுவது உண்மையா?
இதுதான் தமிழில் முதல் வேதம்
என்பதால் சமசுக்கிருதத்தில் இருந்துதான் திருமூலர் கருத்துக்களைக்
கடன் வாங்கினாரா?
கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், மேதைகள், பேராசிரியர்கள் முறையாகவும், நிறையாகவும் பழந்தமிழ் நூல்களில் பயிற்சியும், ஆராய்ச்சியும் இல்லாதவர்களாகவே வாழ்ந்து வருகின்ற காரணத்தினால்; பெரும்பாலானவர்கள் சமசுக்கிருத மொழியின் அடிமைகளாகவும், ஆரிய மாயையில் சிக்கித் தவிப்பவர்களாகவுமே இருந்து வருகிறார்கள். எனவேதான், தமிழ்ச் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும், சமசுக்கிருத சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இது பற்றி பல்லாயிரக் கணக்கான சமசுக்கிருத சொற்களை தமிழ்மொழியிலிருந்து சமசுக்கிருதத்தில் கடன் வாங்கப் பட்ட தமிழ்ச் சொற்களே என்று இன்றைய ஞாலகுரு சித்தர் கருவூறார் எடுத்துக் காட்டி வருவதைச் சான்றாகக் கொள்ளலாம். அதாவது தமிழ் மொழியிலிருந்து பிறந்ததே சமசுக்கிருதம். இதை விடுத்து சமசுக்கிருதம் என்ற இந்த மகள் ஈன்ற குழந்தையே இவளின் தாய் ஆகிய தமிழ் என்று கூறுவது அடிமுட்டாள்தனம்.
‘சத்தி நீ பாதம்’ என்று திருமூலர் குறிக்கும் முத்தி நிலை சத்தி + நிபாதம் என்று சமசுக்கிருதச் சொல்லாகப் பிரித்தே பொருள் சொல்லப் படுகிறது. ஆனால், இது 10வது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் போது “இவன் சத்தி நீ பாதம் என்ற முத்தி நிலையை அடைந்த பிறகே வடநாட்டுப் படையெழுச்சியில் ஈடுபட்டான்” என்று தமது அரச பாரம்பரியத்திலும் குருபாரம்பரியத்திலும் குறிக்கிறார்.
சத்தி நீ => இனி நீ சத்தி வடிவாகவே மாறி விட்டாய்; சித்திகளைப் பெற்று நீ சத்தி நிலையாளனாகி விட்டாய்.
பாதம் => இனி நீ, பிறரின் பாதம் போல் பணிவுடன் தான் செயல்படல் வேண்டும். யாருக்கும் சாபம் கொடுத்தல் கூடாது என்று சத்தி நீ பாத நிலை பெற்றவர்க்கு அறிவுரை, அருளுரை வழங்கப் படுகிறது குருபாரம்பரியத்தில்.
எனவே, சித்தர்களின் தூய வாய்மைமிகு உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழியின் பழமையான சொற்களையும், சொற்றொடர்களையும் தெரியாத புரியாத.... தமிழ் வல்லார்கள் திருமூலரின் அழகிய ஆழமான பொருள் மிக்க அமுதத் தமிழ் சொற்களையும், சொற்றொடர்களையும், வடமொழிச் சொற்களாகவும், சொற்றொடர்களாகவும் தவறுதலாகக் கூறுகிறார்கள். இது தவறு. கண்டிக்கத் தக்கது, வருந்தத் தக்கது. முறையாகக் கற்று நிறையான தமிழ்ப் புலமை இல்லாதவர்களாக இதுபோல் எண்ணற்ற துரோக விரோதக் கருத்துக்களும் செயல்களும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவற்றைக் கண்டித்தேயாக வேண்டும்.

இலிங்கம் என்பதின் விளக்கம்:
இலிங்கம் என்றால் உயிர், அணு.
ஒன்றரை இலட்சம் அணுக்கள் சேர்ந்ததுதான் ஒரு மனித உயிர். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும்.
ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம்.
உயிரின் இரகசியம்தான் இலிங்கம்.
இலங்கு என்றால் ஒளி என்றொரு பொருளும், ஒலி என்றொரு பொருளும் தமிழில் உண்டு. இலங்கு என்றால் விளங்கு, விளக்கம் கொடு.
இலக்கு என்றால் குறிக்கோள், சின்னம், முடிவு, நிறைவு.
இலக்கு, இலங்கு என்ற வேர்ச்சொற்களிலிருந்து வந்ததுதான் இலிங்கம்.
இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள்.
இலிங்கம் - ஆவி ஆன்மா உயிர் எந்த நிலையில் உள்ளன என்பதை விளக்கும் சின்னம், அடையாளம். ஆனால், அப்பாவி அறைகுறைத் தமிழ் வல்லார்கள் ‘லிங்கம்’ என்ற வடசொல்லே ‘இலிங்கம்’ என்று தமிழில் எழுதப் படுவதாகக் கூறுகிறார்கள். வெட்கம்! வெட்கம்! வெட்கம்! வேதனை! வேதனை! வேதனை! சோதனை! சோதனை! சோதனை!
பூஜை என்பதற்குரிய தமிழ்ச் சொல் என்ன? விளக்கம் என்ன?
'பூ' வினால் இறை [48 வகை] வழிபாடு செய்யப்படுவதே 'பூசை' என்று தமிழில் குறிக்கப் படுகின்றது. இதனைத்தான் 'பூஜை' என்று வடமொழியில் குறிக்கின்றனர்.

சக்தி என்று குறிக்கப்பட்டு வரும் சொல்லை சத்தி என்றே குறிக்க வேண்டும், ஏன்?
சத்தி என்ற சொல் சக்தி என்று தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. தமிழ்மொழி வழக்கப்படி 'க்' என்ற எழுத்துக்குப் பிறகு 'கி' அடியற்றி வர வேண்டும். சக்கி என்றுரைத்தல் இவ்விடத்தில் பொருளற்றது. எனவே, சத்தி என்றே குறிக்க வேண்டும். இதே போல் பத்தி (பக்தி), சத்தி (சக்தி), சித்தி, முத்தி (முக்தி) என்றே பதினென்சித்தர்கள் தங்கள் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர்.
வழக்கில் உள்ள திருமந்திரம் என்ற நூலுக்கு அது மனதைத் திறமைப் படுத்துவதற்காகப் பயன்படக் கூடிய ஒன்று (மனது + திறம் = மந்திறம்) என்று குறிக்கப் பட்டு 'திருமந்திறம்' என்றே சித்தர்கள் பயன் படுத்தியுள்ளனர். இதைப் பன்முறை வற்புறுத்தியும் பலர் இடையின் 'ர' உபயோகப்படுத்தி வருகின்றனர். அவர்கள் திருந்த வேண்டும்.
பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லா?
பட்டாளம் என்பது தமிழ்ச் சொல்லே!
பட்டு + ஆள் + அம் = பட்டாளம்
பட்டு = துஞ்சுதல் = தற்கொலை
போரில் தன்னை முன்னிறுத்தி மாய்த்துக் கொள்கின்ற ஆட்கள் கொண்ட அமைப்பு. பிற்காலச் சோழப் பேரரசில் தாத்தா கருவூறார் பட்டாளத்தை உருவாக்கினார் என்பது குருபாரம்பரிய ஏடுகளில் காணப்படுகின்றது. பட்டாளம் என்ற தற்கொலைப் படையையே இராசராச சோழன் உருவாக்கிச் செயல்பட்டான் என்றும் உள்ளது.
No comments:
Post a Comment