குருவே துணை!
அருளாட்சி அமைப்பு பணிக்கு அழைப்பு
(பதினெண் சித்தர் பீடம் மடம்
அறக்கட்டளை பதிவு எண். 75/2003)
அருளாட்சி நிருவாகம்
காரைக்குடி மற்றும்
சேலம் மாவட்டம்
“முன்னோர் வழிபாடும்
மூத்தோர் வழிநடத்தலும்”
இறைமையின்
இருப்பிடங்களே சித்தர்கள்
அன்பர்களே,
தமிழ் இன, மொழி, மத, ஆன்மீக
ஆட்சிமீட்சிக்காக “தமிழின குருபீடம்”
அருள்மிகு ”அரசயோகிக்கருவூறார்”
அவர்களின் வழி நின்று மானுட வாழ்வியலில் பேரானந்த உணர்வு பெற அழைக்கின்றோம்.
நெடிய பாரம்பரியமிக்க “சித்தர் நெறி” எனும் “இந்துமத” த்தின் பெயரால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிசெய்து கொள்ள நம்முடைய தமிழின குருபீட வாரிசுகளை சந்தித்து விளக்கம் பெற்றிட அருளாட்சிக்கு அழைக்கிறோம்.
நம்முடைய வாழ்வியலுக்குத் தேவையான பூசைகளை, வாழ்வியல் சடங்குகளை தமிழ்மொழி வழியே செய்து அருளை அனுபவப் பொருளாகப் பெற அருளாட்சிக்கு அழைக்கின்றோம்.
விண்ணுயர்ந்த கோபுரங்களையுடைய கோவில்கள், ஆலயங்கள், பீடங்கள் மற்றும் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு இடங்களில் தமிழ் மொழி வழிப்பூசைகளை முறையாகச் செய்து அருள் பெற, கற்றுக்கொள்ள “தமிழின குருபீடம்” எனும் “அருளாட்சி நிருவாகம்” அழைக்கிறது.
புதிய, பழைய கோவில்களில் குடமுழுக்கு புத்துயிர்ப்பு, யாகம், வேள்வி, ஓகம், ஓமம், யக்ஞம் அனைத்தும் நமது தாய்மொழியான தமிழ் மொழியிலே செய்து அருள்வலிமை பெறச்செய்ய இடைத்தரகர்கள் இன்றி நாமே செய்திட, கற்றுக்கொள்ள உலகில் முதலில் நாற்பத்தெட்டு வகையான கருவறைகளை உருவாக்கிய பதினெண் சித்தர்கள் அழைக்கின்றார்கள்.
உண்மையான தமிழின, மொழி, மத வரலாறுகளை தெரிந்து, புரிந்து, மறை, முறை, நெறி, வேதங்களை கற்று இப்பிறவியை பயனுள்ளதாக ஆக்கிட சித்தர்கள் அருளாட்சிக்கு அழைக்கின்றார்கள்.
வாழ்வியலில் ஏற்பட்டு உள்ள பிறப்பியல் (ஜாதகம்) கோளாறுகள், முற்பிறப்பு ஊழ்வினை, விதி இவைகளை வென்றிடவும், தோடங்களால் (தோஷங்கள்) வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்கள், திருமண, குழந்தைப்பேறு தடைகள் (மருத்துவ) உடல், உயிர் நோய்கள் முதலியவற்றை சரிசெய்ய “தமிழின குருபீட” வாரிசுகளை சந்தித்து நலம் பெறுங்கள்.
குண்டலி, யோகம், தியானம், தெய்வீக கலைகள், சாகா கலைகள் என எண்ணற்ற பயிற்சிகளை பெறவும், அனைத்து கோயில் பூசாரிகளுக்கான ஆகம, பூசை முறை பயிற்சிகளும், கணபதி ஓமம், யாகம், யக்ஞம், வேள்வி பயிற்சிகளும் சாதி பாகுபாடு இன்றி யாவருக்கும் கற்றுத்தரப்படும்.
இம்மண்ணுலகில் ஏற்பட்டு உள்ள போதை நிலைகள், கையூட்டு (இலஞ்சம்) நிலைகள், தன்னல வெறி, பொருள் ஆசை மற்றும் பேராசைகள், சாதி தீண்டாமை நிலைகள் ஒழிக்க, இன மொழி, மத, ஆன்மீக வழி ஒருமுகப்பட்டு உழைக்க, தமிழ் மண்ணை அனைத்திற்கும் பண்பட்ட விளைநிலமாக்கி உலக பண்பாட்டு பேரரசை, அருளாட்சியை அமைப்போம்.
வாரீர் வாரீர், அருளாட்சி அமைக்க வாரீர்!
குரு வாழ்க!
ஓம் திருச்சிற்றம்பலம்
தலைமைப்பீட முகவரி:
அருளாட்சி
நிருவாகம்,
பதினெண்
சித்தர் பீடம் மடம்,
{அறக்கட்டளையின்
மேலாண்மைக்குட்பட்டது. பதிவு எண். 75/2003)
31,
சிவசக்தி இல்லம்,
மாதவன்
நகர், பருப்பூரணி கிழக்கு,
காரைக்குடி
– 630 001.
கைபேசி: 098653-25309
சேலம் முகவரி:
அருளாட்சி
நிருவாகம்,
சீத்தா
மரத்து தோப்பு, எதிர் கரடு,
GK கரட்டூர்
A. கொண்டலாம்பட்டி,
சேலம்
மாவட்டம்.
கைபேசி: 099444-03035.
_/\_ ஓம் சிவசிவ ஓம் _/\_
ReplyDeleteஆதி சிவனின் அருள் கிடைத்தால் நானும் வருகிறேன்!
நல்வரவு!
Deleteஆர்வமுடையவர்களை பதினெண் சித்தர் பீடம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.
Dear Sir,
DeleteI would like to know more about you, please send the complete details through my mail id. arunghanpath@gmail.com
Thanks and best regards
Dear Mr. Arun Murugan,
DeleteThanks for your interest and stay in touch with us for much more news / articls done by 12th Pathinenn Siddhar Peedathipathi Siddhar Arasayogi Karuwooraar.